/indian-express-tamil/media/media_files/2025/09/26/bill-gates-2025-09-26-14-57-35.jpg)
‘My first connection with India’: Bill Gates reveals how 15 IIT engineers transformed Microsoft
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், புதிய H-1B விசாக்களுக்கான கட்டணத்தை $100,000 ஆக உயர்த்தியதால், வெளிநாட்டுத் திறமையாளர்களை வேலைக்கு எடுக்கும் முடிவை அமெரிக்க நிறுவனங்கள் மறுபரிசீலனை செய்யுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த வேளையில், மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் 2024 ஆம் ஆண்டு IIT டெல்லியில் ஆற்றிய உரை சமூக வலைதளங்களில் மீண்டும் அதிக கவனம் பெற்று வருகிறது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை உலக அளவில் மாபெரும் சக்தியாக மாற்றியதில், 15 இந்திய IIT பட்டதாரிகளின் பங்களிப்பு குறித்து பில்கேட்ஸ் அப்போது நெகிழ்ச்சியுடன் பேசியிருந்தார்.
🇮🇳🇺🇸 Flashback: Bill Gates Admits Hiring Indian Engineers from IIT was TURNING POINT for Microsoft
— RT_India (@RT_India_news) September 22, 2025
Is the US about to trigger a reverse brain drain out of America with Trump's H-1B move? 🧠👋
📹 Brut India YouTube pic.twitter.com/jQnOY5Ewhy
"ஒரு வகையில், இந்தியாவுடனான எனது முதல் தொடர்பு ஐஐடி-கள் மூலமாகவே வந்தது. என்னுடைய உயர் அதிகாரிகளில் ஒருவர், 'நாம் இந்தியாவுக்குச் சென்று ஐஐடி-யில் படித்த சுமார் 15 பேரை வேலைக்கு அமர்த்தினால், அது மைக்ரோசாஃப்ட்டின் பொறியியல் வலிமையை மேம்படுத்தும்' என்று என்னிடம் கூறினார்.
அந்த நேரத்தில், எங்களிடம் சில நூறு ஊழியர்கள் மட்டுமே இருந்தனர். இருப்பினும், அற்புதமான இன்ஜினியர்களைக் கண்டுபிடிப்பது மிகக் கடினமாக இருந்தது. அந்த யோசனை அப்போது எனக்கு மிகவும் சரியாகத் தோன்றியது.
நான் உள்ளூர் திறமையைக் கவர்ந்து செல்வதாக இந்திய ஊடகங்களும், வெளிநாட்டு ஆட்களைக் கொண்டுவருவதாக அமெரிக்க ஊடகங்களும் விமர்சித்தன. ஆனால், இப்போது 25 ஆண்டுகள் கழித்து, அது ஒரு மிகப்பெரிய அற்புதமான காரியம் என்று நாம் உறுதியாகக் கூற முடியும்!" என்று அவர் உணர்ச்சிப்பூர்வமாகக் குறிப்பிட்டார்.
இன்று, மைக்ரோசாஃப்ட் $3.85 டிரில்லியன் சந்தை மதிப்புடன் உலகின் இரண்டாவது பெரிய நிறுவனமாகத் திகழ்கிறது. இந்நிறுவனத்தின் அடித்தளத்தை வலுப்படுத்தியதில், அந்த ஆரம்பகால இந்தியப் பொறியாளர்களின் பங்கு இன்றியமையாதது என்பதை பில் கேட்ஸின் இந்த வார்த்தைகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
H-1B விசா விதிகள் இறுக்கமடையும் இந்தச் சமயத்தில், பில் கேட்ஸின் இந்த மனந்திறந்த பேச்சு, உலகளாவிய தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு இந்தியத் திறமையாளர்கள் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை மீண்டும் நிரூபிக்கிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.