ரூ. 2000 கோடி அபேஸ்: ஷில்பா ஷெட்டி கணவருக்கு சம்மன்!

ஐபிஎல் போட்டியில் ராஜ் குந்த்ரா சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டிருந்தது

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி கணவர் ராஜ் குந்த்ராவுக்கு அமலாகத்துறையினர் இன்று சம்மன் அனுப்பியுள்ளனர்.

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா மும்பையில் பிரபல தொழிலதிபர்கலில் ஒருவர். ராஜ்குந்த்ரா பிட்காயின் எனப்படும் மெய்நிகர் கரன்சி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்ததுள்ளது.கடந்த வருடம் இறுதியில் ரிசர்வ் வங்கி, இந்தியாவில் பிட் காயின் பயன்படுத்த கூடாது என எச்சரித்திருந்தது. அதையும் மீறி காயின் உபயோகப்படுத்தினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

2,000 கோடி ரூபாய் பிட்காயின் பரிவர்த்தனை மேற்கொண்டதில் முறைகேட்டில் ராஜ் குந்தராவுக்கு சம்பந்தம் இருப்பதாக அமலாக்கத் துறையினர் சந்தேகித்து உள்ளனர். மேலும், ராஜ்குந்த்ராவை ரகசிய கண்காணிப்பு குழு ஒன்று நீண்ட நாட்களாக ரகசியமாக உளவு பார்த்து வந்துள்ளது. இந்நிலையில், ராஜ் குந்த்ராவுக்கு அமலாக்கத்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக மும்பையில் அவரிடம் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

8,000 முதலீட்டாளர்களிடம் சுமார் ரூ.2,000 கோடி மதிப்புக்கு கெயின் பிட்காயின் நிறுவனம் மோசடி செய்ததில் கடந்த ஏப்ரல் மாதம் கெயின் பிட்காயின் நிறுவனத்தின் நிறுவனர் அமித் பரத்வாஜ் கைது செய்யப்பட்டார். இந்த பரத்வாஜ் உடன் ஷில்பா ஷெட்டி கணவருக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் வலுத்துள்ளது.

இதே போல், 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜ் குந்த்ரா சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close