Advertisment

BMW Motorrad இந்தியாவில் களம் இறக்கும் புதிய வகை பைக்குகள் இவை தான்

2020ல் இரண்டி லட்சம் பைக்குகளை விற்க திட்டம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
BMW New Bikes

BMW New Bikes

ஜெர்மனியைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிக்கும் நிறுவனமான BMW, தன்னுடைய 500சிசி திறனுள்ள புதிய இருசக்கர வாகனங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.

Advertisment

சென்னையைச் சேர்ந்த மோட்டார் நிறுவனமான டிவிஎஸ் உடன் இணைந்து இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் BMW இருசக்கர வாகனங்களைத் தான் அறிமுகப்படுத்த உள்ளது.

ஏற்கனவே மெக்சிகோ, ப்ரேசில் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட G 310R வண்டியின் விலை சுமார் 2.99 லட்சம் ரூபாய் ஆகும். G 310 GSன் விலை சுமார் 3.49 லட்சம் ஆகும்.

BMW G 310 R BMW G 310 R

இந்த இரண்டு புதிய வண்டிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதன் மூலமாக இங்கு BMWவிற்கான நல்ல சந்தையினை உருவாக்க முடியும் என்று BMW மோட்டோராடின் தலைமை நிர்வாகி டிமிட்ரிஸ் ராப்டிஸ் கூறியுள்ளார்.

BMWவிற்கான நல்ல எதிர்காலத்தினையும் வளர்ச்சியினையும் இந்தியாவில் உருவாக்க முடியும் என்று கூறினார். கடந்த வருடம் BMW இருசக்கர வாகனங்களை கடந்த வருடம் தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அறிமுகப்படுத்திய 9 மாதங்களில் சுமார் 252 வண்டிகள் விற்பனை செய்யப்பட்டதாக கூறினார்.

BMW Motorrad G 310 GS BMW Motorrad G 310 GS

மொத்தம் 30 மாடல்களைக் கொண்டிருக்கும் BMW இருசக்கர வாகனங்களில் 16 மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு உள்ளன.

2020ற்குள் சுமார் 2 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை இலக்காக கொண்டுள்ளது. கடந்த வருடம் மட்டும் சுமார் 1.64 லட்சம் வண்டிகளை விற்றுள்ளது.

இந்த இரண்டு புதிய மாடல்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கும் என்றும், முதலாம் காலாண்டில் சுமார் 248 வண்டிகள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளது என்றும் BMWவிற்கான இந்திய தலைவர் விக்ரம் பவஹ் கூறியுள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment