Advertisment

மூத்தக் குடிமக்களுக்கு 8.45 சதவீதம் வரை வட்டி; சுப ஆரம்ப டெபாசிட்; புதிய திட்டம் அறிமுகம்

பேங்க் ஆஃப் பரோடா சுப ஆரம்ப டெபாசிட் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

author-image
WebDesk
New Update
BOI introduce Shubh Arambh Deposit scheme

பேங்க் ஆஃப் இந்தியா 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான பிற டெபாசிட்களுக்கும் வர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்கி வருகிறது.

பேங்க் ஆஃப் இந்தியா (BoI) மூத்த குடிமக்களுக்கான சுப ஆரம்ப டெபாசிட் (Shubh Arambh Deposit) என்ற வைப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம், 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிறப்பு மூத்த குடிமக்கள் 0.65 சதவீதம் கூடுதலாகவும், மூத்த குடிமக்கள் 50 சதவீதம் கூடுதலாகவும் வட்டி பெற்றுக் கொள்ளலாம்.

Advertisment

இந்தத் திட்டம் ஏப்ரல் 1, 2023 முதல் அமலுக்கு வருகிறது. இத்திட்டத்தில் 7.80% வட்டி வழங்கப்படுகிறது. 60-80 வயதுள்ள மூத்தக் குடிமக்களுக்கு 7.65 சதவீதம் வட்டி வழங்குகிறது.

501 நாள்கள் டெபாசிட்க்கு 7.15 சதவீதம் வட்டி வழங்கப்படும்.

இது தவிர, பேங்க் ஆஃப் இந்தியா 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான பிற டெபாசிட்களுக்கும் வர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்கி வருகிறது.

அந்த வகையில், ஏழு நாட்கள் முதல் பத்து ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு சூப்பர் சீனியர் குடிமக்களுக்கு 7.40% வரையும், வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு 6.75% வரையும் வட்டி விகிதங்கள் கிடைக்கும்.

மேலும், மூத்த குடிமக்களுக்கு 0.75% மற்றும் சூப்பர் சீனியர் குடிமக்களுக்கு 0.90% என்ற மொத்த கூடுதல் வட்டி விகிதம் மூன்று ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட வைப்புகளுக்கு வழங்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment