/tamil-ie/media/media_files/uploads/2021/04/indane-lpg-gas-cylinder-1200.jpg)
Book Indane LPG cylinder without Aadhaar : ஆதார் அடையாள அட்டை மற்றும் அட்ரஸ் ப்ரூஃப் ஏதும் இல்லாமல் நீங்கள் எல்.பி.ஜி. சிலிண்டர்களை வாங்கிக் கொள்ளலாம் என்ற மிகவும் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது இந்தியன் ஆயில் கார்ப்பரேசன்.
நாடு முழுவதும் சிலிண்டர்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஐ.ஒ.சி.எல். நிறுவனம். இதற்கு முன்பு எல்.பி.ஜி. இணைப்பை பெற நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ஆதார் மற்றும் முகவரி சான்றுகளை வழங்க வேண்டும் என்பதை கட்டாயமாக கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது/
இண்டேன் கியாஸ்களை வழங்கும் விநியோகஸ்தர்கள் அல்லது பி.ஒ.எஸ். நிலையங்களுக்கு நேரில் சென்று 5 கி.கி எல்.பி.ஜி. சிலிண்டர்களை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆதார் அடையாள அட்டைக்கு பதிலாக நீங்கள் உங்களின் அதிகாரப்பூர்வ இதர அடையாள அட்டைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் முகவரிக்கான சான்றினை சமர்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.
அதே போன்று எரிவாயு தீர்ந்துவிட்டால், அருகில் உள்ள நிலையங்களுக்கு சென்று நிரப்பிக் கொள்ளலாம். 5 கிலோ எல்.பி.ஜி. சிலிண்டர்கள் பி.ஐ.எஸ். தரச்சான்றிதழ் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தங்களின் 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரை வாடிக்கையாளர்கள் வாட்ஸ் ஆப் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம். இண்டேன் நிறுவனம் அதற்காக பிரத்யேக எண்களையும் வழங்கியுள்ளது. மிஸ்டு கால்கள் மூலமாக புக் செய்ய வாடிக்கையாளர்கள் 8454955555 என்ற எண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம். அதே போன்று ரீஃபில் செய்ய நிறுவனத்திற்கு 7588888824 என்ற எண்ணில் கால் அல்லது குறுஞ்செய்தி அனுப்பிக் கொள்ள முடியும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.