டாய்லெட் சீட் கவரில் இந்து கடவுள் படம்… ட்விட்டரில் டிரெண்டாகும் #BoycottAmazon

அமேசான் ஆப்-ஐ அன்இன்ஸ்டால் செய்து, அதனை ஸ்கீரின் ஷாட் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்

By: May 16, 2019, 8:54:35 PM

அமேசான் நிறுவனத்துக்கு எதிராக #BoycottAmazon என்ற ஹேஷ்டேக் சமூக தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

உலகளவில் டாப் பொசிஷனில் உள்ள இணைய வர்த்தக நிறுவனமான அமேசான், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டிருக்கிறது. பொருட்களை பேக்கிங் செய்ய இனி இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்த அமேசான் முடிவு செய்திருப்பதால், ஆட்குறைப்பு வேலையில் அந்நிறுவனம் தீவிரமாக இருக்கிறது.

மேலும் படிக்க – வேலையை ராஜினாமா செய்தால் ரூ.7 லட்சம் : அமேசானின் ‘பலே’ திட்டம்!!

இந்நிலையில், அமேசான் நிறுவனத்துக்கு ஒரு புதிய சிக்கல் எழுந்துள்ளது.

அமேசான் இணையதளத்தில் விற்பனைக்காக பதிவிடப்பட்டுள்ள, டாய்லெட் சீட் கவர் உள்ளிட்ட பல பொருட்களில் இந்து கடவுளின் படங்கள் இடம்பெற்றுள்ளது. அது இந்து கடவுள்களை அவமானப்படுத்தும் வகையில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது, குற்றச்சாட்டாக மட்டுமில்லாமல் #BoycottAmazon என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

நெட்டிசன்கள் பலரும், அவர்களுடைய அமேசான் ஆப்-ஐ அன்இன்ஸ்டால் செய்து, அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும், இந்த எதிர்ப்பு குறித்து இதுவரையில் அமேசான் நிறுவனம் பதிலளிக்கவில்லை.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Boycott amazon trends in twitter

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X