2022-23ஆம் ஆண்டுக்கான மூன்றாம் காலாண்டு முடிவுகளை நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில், பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிகர லாபம் டிசம்பர் காலாண்டில் ஒதுக்கீடுகளின் அதிகரிப்பு காரணமாக ஆண்டுக்கு ஆண்டு 44% குறைந்துள்ளது.
மேலும், நடப்பு நிதியாண்டில் அதன் கடன் செலவை 2%க்கும் குறைவாக வைத்திருக்க வங்கி இலக்கு கொண்டுள்ளது.
அதேநேரத்தில், 2022-23 ஆம் ஆண்டில் 8-9% டெபாசிட் வளர்ச்சியை வங்கி இலக்காகக் கொண்டுள்ளது.
பஜாஜ் ஃபின்சர்வ்
பஜாஜ் ஃபின்சர்வின் ஒருங்கிணைந்த லாபம் 42% அதிகரித்துள்ளது. ஒருங்கிணைந்த மொத்த வருமானம் 23% அதிகரித்து ரூ.21,755 கோடியாக உள்ளது. வரிக்கு முந்தைய லாபம் 36% அதிகரித்து ரூ.4,418.96 கோடியாக உள்ளது.
தொடர்ந்து பஜாஜ் அலைன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் தனிநபர் மதிப்பீட்டில் 22% வளர்ச்சியைப் பதிவுசெய்து ரூ.2,289 கோடியாக உள்ளது. புதுப்பித்தல் பிரீமியம் 30% அதிகரித்து ரூ.2,215 கோடியாக காணப்படுகிறது.
எல் அண்ட் டி நிறுவனம்
L&T இன் ஒருங்கிணைந்த வருவாய் 17% உயர்ந்து ரூ.46,390 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ.39,563 கோடியாக காணப்பட்டது.
கெயில்
2022 ஆம் ஆண்டு அக்டோபர்-டிசம்பர் மாதங்களில் கெயில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ. 397.59 கோடியாக உள்ளது. இந்த நிலையில் திங்கள்கிழமை பிஎஸ்இயில் GAIL பங்குகள் 4.24% குறைந்து 94.95 ஆக விற்பனையாகின.
எனினும், செயல்பாடுகளின் வருவாய் 2022 அக்டோபர்-டிசம்பர் மாதத்தில் 37% அதிகரித்து 35,939.96 கோடி ரூபாயாக இருந்தது.
பிபிசிஎல் நிதி நிலை அறிக்கை
முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் இருந்த ரூ. 1.17 டிரில்லியனில் இருந்து பிபிசிஎல்-ன் செயல்பாடுகளின் வருவாய் 13% அதிகரித்து ரூ.1.33 டிரில்லியனாக உள்ளது.
BPCL சந்தை விற்பனை முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 11.15 MMT இலிருந்து Q3 FY22 இல் 12.81 மில்லியன் மெட்ரிக் டன்னாக (MMT) உயர்ந்துள்ளது.
2022 டிசம்பரில் முடிவடைந்த ஒன்பது மாதங்களுக்கான சந்தை விற்பனை முந்தைய நிதியாண்டின் இதே காலப்பகுதியில் 30.69 MMT லிருந்து 36.01 MMT ஆக இருந்தது
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/