ஏர்டெல் நிறுவனத்தா இனிமேல் சேவையை வழங்க முடியாது என்று திவால் நோட்டீஸ் அளித்து விட்டதை தொடர்ந்து, ஒரே வாரத்தில் 12 லட்சம் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் சேவையை பின் தொடர ஆரம்பித்துள்ளதாக வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஏர்செல் சேவை முடக்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஏர்செல் சர்வீஸ் கடைகளை முற்றுகையிட்டனர். அதன் பின்பு, ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான கடன் நெருக்கடி காரணமாக ஏர்செல் நிறுவனம் தேசிய கடன் தீர்ப்பாயத்தில் திவால் மனுத் தாக்கல் செய்தது.இதை அந்த தீர்ப்பாயமும் ஏற்றுக்கொண்டது.
இதையடுத்து, ஏர்செல் வாடிக்கையாளர்கள் வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மாறிக்கொள்ள தொலைத்தொடர்பு ஒழுங்கு நிறுவனமான டிராய் கால அவகாசம் அளித்தது. இந்த கால அவகாசத்திற்குள் வாடிக்கையாளர்கள் ஏர்டெல், வோடஃபோன், பிஎஸ்என்எல் போன்ற பிற தொலைத்தொடர்பு சேவைகளுக்கு மாறும்படி அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், சென்ற வாரத்தில் மட்டும், சுமார் 12 லட்சம் ஏர்செல் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, 4ஜி நெர்வோர்க்கை மேலும் மேம்படுத்த அந்த நிறுவனம் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.
அதே பிஎஸ்என்எல் நிறுவனம், ஏர்செட்ல்லின் வீழ்ச்சியை புரிந்துக் கொண்டு, அந்நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு புதிய புதிய ரீசார்ஜ் திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அன்லிமிடட் வாய்ச் காலிங் சேவை, நாள் ஒன்றுக்கு அதிக டேட்டா என புதிய அறிவிப்புகளும் வாடிக்கையாளர்களை வெகுவளவில் கவர்ந்துள்ளது.