பிஎஸ்என்எல் அறிவித்த அதிரடி ஆஃபர்: 365 நாட்களுக்கு அன்லிமிடட் காலிங்!

பிஎஸ்என்எல் நிறுவனம், ஜியோவுடன் கடுமையாக போட்டிப்போட்டுக் கொண்டு வருகிறது.

By: Updated: October 30, 2018, 04:52:00 PM

டெலிகாம் நிறுவனங்கள், தீபாவளியையொட்டி புதிய புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது வாடிக்கையாளர்களுக்கு பிரமிக்க வைக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிஎஸ்என்எல் ஆஃபர்:

டெலிகாம் சந்தையில் ஜியோவின் வருகைக்கு பின்பு, ஏற்பட்ட ட மாற்றங்கள் அனைத்தும் தெரிந்ததே. குறிப்பாக ஏர்டெல், வோடஃபோன், போன்ற முன்னணி நிறுவனங்கள் பல, சந்தையில் தோல்வியை தழுவினர், இருப்பினும், தனக்கென தனி வாடிக்கையாளர்களை வைத்துள்ள பிஎஸ்என்எல் நிறுவனம், ஜியோவுடன் கடுமையாக போட்டிப்போட்டுக் கொண்டு வருகிறது.

ஏர்செல்லின் வீழ்ச்சிக்கு பிறகு சுமார், 15 லட்சம் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.  தற்போது  தீபாவளி கொண்டாட்டங்கள், ஆஃபர்கள், பரிசுகள் கலைக்கட்ட தொடங்கியுள்ள நிலையில் மற்ற டெலிகாம் நிறுவனங்கள் சில ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது.

பிஎஸ்என்எல், தீபாவளி சலுகையின் கீழ் ரூ.180 ரீசார்ஜுக்கு ரூ.190 டாக்டைம், ரூ.410 ரீசார்ஜுக்கு ரூ.440 டாக்டைம், ரூ.510 ரீசார்ஜுக்கு ரூ.555 மதிப்பிலான டாக்டைம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை நவம்பர் 11 ஆம் தேதி வரை மட்டுமே என்பது கூடுதல் தகவல்.

இந்த அதிரடி சலுகைகள் காலிங் சேவையில் மட்டுமே. மொபைல் டேட்டா அல்லது எஸ்எம்எஸ் போன்றவை வழங்கப்படவில்லை.

பிஎஸ்என்எல் அறிவித்துள்ள புதிய திட்டங்கள்:

1. ரூ.1,699 மற்றும் ரூ.2,099ரீசார்ஜ் திட்டத்தில்   டேட்டா, வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் மற்றும் பிரத்யேக ரிங்பேக் டோன் வழங்கப்படுகிறது.

2. ரூ.1,699  ரீசார்ஜ் திட்டத்தில்   தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 100 எஸ்எம்எஸ் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

3. ரூ.2,099 ரீசார்ஜ் திட்டத்தில் தினமும் 4 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. டேட்டாவுடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ், பிரத்யேக ரிங்பேக் டோன் வழங்கப்படுகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Bsnl diwali 2018 offer two new prepaid plans launched with 365 days validity unlimited calls

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X