பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ஃபைப்ரோ காம்போ 777 மற்றும் ஃபைப்ரோ காம்போ 1277 திட்டத்தின் வேலிட்ட்டி நாட்களை அதிகரித்து அறிவித்துள்ளது.
பிஎஸ்என்எல் அறிவிப்பு:
டெலிகாம் சந்தையில் ஜியோவின் வருகைக்கு பின்பு, ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக ஏர்டெல், வோடஃபோன், போன்ற முன்னணி நிறுவனங்கள் பல, சந்தையில் தோல்வியை தழுவினர், இருப்பினும், தனக்கென தனி வாடிக்கையாளர்களை வைத்துள்ள பிஎஸ்என்எல் நிறுவனம், ஜியோவுடன் கடுமையாக போட்டிப்போட்டுக் கொண்டு வருகிறது.
மேலும், ஏர்செல்லின் வீழ்ச்சிக்கு பிறகு சுமார், 15 லட்சம் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சந்தையில் போட்டியை சமாளிக்கும் விதமாக நாளுக்கு நாள் இந் நிறுவனம் டேட்டாவில் புதிய ஆஃபர், ரீசார்ஜ் திட்டத்தில் அதிரடியான மாற்றங்கள், ரூ 100 க்கு கீழ் புதிய ரீசார்ஜ் திட்டங்கள் என புதிய புதிய அறிவிப்புகளை அறிவித்து வருகிறது.
இந்த வகையில் கடந்த ஜுன் மாதம் இந்த நிறுவனம் இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியது. அவை ஃபைப்ரோ காம்போ 777 திட்டத்தின் கீழ் 500 ஜீபி டேட்டா 50 எம்பீபிஎஸ் வேகத்திலும், ஃபைப்ரோ காம்போ 1277 திட்டத்தின் கீழ் 700 ஜீபி டேட்டா 100 எம்பீபிஎஸ் வேகத்திலும் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்து தற்போது அந்த இரண்டு திட்டங்களின் வேலிடிட்டி நாட்களை அதிகரித்து அறிவித்துள்ளது.