ப்ரீபெய்ட் எண்களுக்கான வேலிடிட்டி மே 5 வரை நீட்டிப்பு - பிஎஸ்என்எல்

டிஜிட்டல் தளங்கள் மூலம் ரீசார்ஜ் செய்ய முடியாத சந்தாதாரர்களுக்காக 'Ghar Baithe Recharge' மற்றும் 'Apno ki madad se recharge' போன்ற வசதிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது

BSNL: ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் தனது ப்ரீபெய்ட் கைபேசி எண்களுக்கான வேலிடிட்டியை மே 5 வரை நீட்டித்துள்ளது.

இதன் மூலம் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் கைபேசி இணைப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு ரீசார்ஜ் செய்யாமல் இன்கம்மிங் கால்கள் பெறும் வசதியை பெறுவார்கள். மேலும் பிஎஸ்என்எல் தனது சந்தாதாரர்களுக்காக 5670099 என்ற இலவச கட்டணமில்லா எண்ணில் “Recharge Helpline” வசதியையும் தொடங்கியுள்ளது.


ஆன்லைன் மூலமாக அஞ்சல் அலுவலக RD கணக்கில் பணம் டெபாசிட் செய்வது எப்படி?

டிஜிட்டல் தளங்கள் மூலம் ரீசார்ஜ் செய்ய முடியாத சந்தாதாரர்களுக்காக ‘Ghar Baithe Recharge’ மற்றும் ‘Apno ki madad se recharge’ போன்ற வசதிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

வடக்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் தற்போது கிடைக்கும் இந்த வசதி தெற்கு மற்றும் கிழக்கு மணடலங்களில் வரும் ஏப்ரல் 22 முதல் கிடைக்கும், என பிஎஸ்என்எல் ஒரு செய்திக் குறிப்பில் கூறியுள்ளது.

‘Ghar Baithe Recharge’ திட்டத்தின் கீழ் சந்தாதாரர்கள் ரீசார்ஜ் செய்வதற்கு ஒரு கோரிக்கையை பதிவு செய்ய வேண்டும். அதனடிப்படையில் ஒரு பிஎஸ்என்எல் நிர்வாகி சந்தாதாரரை சந்தித்து தேவைப்படும் ரீசார்ஜை கைபேசி எண்ணுக்கு செய்து தருவார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get all the Latest Tamil News and Business News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close