scorecardresearch

ஜியோவை மிஞ்சிய பிஎஸ்என்எல் நிறுவனம்: ரூ. 399 க்கு 30ஜிபி டேட்டா!

ஜியோவின் இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 20 ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது.

BSNL Unlimited yearly plans

வாடிக்கையாளர்களை கவரும் வகையில், பிஎஸ்என்எல் நிறுவனம், ரூ.399 போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில், அன்லிமிடட் காலிங் மற்றும் 30 ஜிபி டேட்டா சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.

டெலிகாம் சந்தையில் ஜியோவின் வருகைக்கு பின்பு, ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக ஏர்டெல், வோடஃபோன், ஏர்செல்  போன்ற முன்னணி நிறுவனங்கள் பல, சந்தையில் தோல்வியை தழுவினர், இருப்பினும், தனக்கென தனி வாடிக்கையாளர்களை வைத்துள்ள பிஎஸ்என்எல் நிறுவனம், ஜியோவுடன் கடுமையாக போட்டிப்போட்டுக் கொண்டு வருகிறது. இந்த போட்டியில் ஜியோவை மிஞ்சும் அளவிற்கு பிஎஸ்என்எல் நிறுவனம் போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள, ரீசார்ஜ் திட்டங்களில் டேட்டா ஆஃபர்கள், கிஃப்ட் வவுச்சர்கள், ஷாப்பிங் கூப்பன்கள் என டெலிகாம் நிறுவனங்கள் பல்வேறு ஆஃபர்களை அள்ளி தருவது வழக்கமாக மாறி வருகிறது. அந்த வகையில் புதிய பாதையை தேர்ந்தெடுத்துள்ள , பிஎஸ்என்எல் நிறுவனம் 30 ஜிபி டேட்டா சலுகைக்யை குறைந்த விலையில் அறிவித்துள்ளது.

இதன்படி, ரூ. 399 க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடட் காலிங் வசதி, 30 ஜிபி டேட்டா ஆகியவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் இன்று(1.3.18) முதலே அமலுக்கு வருகிறது. , பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த ரீசார்ஜ் திட்டம், ஜிடோவின் ரூ.409 திட்டத்தை மிஞ்சும் அளவிற்கு அமைந்துள்ளது. ஏனெனில் ஜியோவின்  இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 20 ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Bsnl holi dhamaka offer rs 399 postpaid plan with unlimited calling 30gb data launched