பிஎஸ்என்எல் அதிரடி: ரூ.99 க்கு பிராட்பேன்ட் சேவை !

முன்பணமாக ரூ.500 செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்த ரூ. 99 க்கு பிராட்பேன்ட் சேவை வழங்குவதாக அறிவித்துள்ளது.

டெலிகாம் சந்தையில் ஜியோவின் வருகைக்கு பின்பு, ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக ஏர்டெல், வோடஃபோன், ஏர்செல் போன்ற முன்னணி நிறுவனங்கள் பல, சந்தையில் தோல்வியை தழுவினர், இருப்பினும், தனக்கென தனி வாடிக்கையாளர்களை வைத்துள்ள பிஎஸ்என்எல் நிறுவனம், ஜியோவுடன் கடுமையாக போட்டிப்போட்டுக் கொண்டு வருகிறது.

இந்த போட்டியில் ஜியோவை மிஞ்சும் அளவிற்கு பிஎஸ்என்எல் நிறுவனம் போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.அதனைத்தொடர்ந்து தற்போது பிராட்பேன்ட் சேவையிலும் புதிய யுக்தியை கையாள முடிவெடுத்துள்ளது.நான்கு புதிய பிராட்பேன்ட் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தினசரி டேட்டாவில் துவங்கி, 20Mbps வேகத்தில் கிடைக்கும் சலுகைகள் வரை புதிய புதிய சலுகைகள் உடன் இடம் பெற்றுள்ளன.

BBG ULD காம்போ என அழைக்கப்படும் பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த புதிய சேவையில் 20Mbps வேகத்தில் வழங்கப்படும் என்றும் நிர்ணயிக்கப்பட்ட அளவு நிறைவுற்றதும் டேட்டா வேகம் 1Mbps ஆக குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய சேவைகளில் நாடு முழுக்க அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.

90 நாட்களுக்கு மட்டுமே இது பொருந்தும், ஆறு மாதத்திற்கு பயன்படுத்தியதும், வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் வழங்கும் மற்ற சலுகைகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். இத்துடன் முன்பணமாக ரூ.500 செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

×Close
×Close