பிஎஸ்என்எல் அடுத்த அதிரடி: ரூ. 99 க்கு அளவில்லா காலிங் வசதி!!

ரூ. 99 மற்றும் 319 என்ற புதிய ரீசார்ஜ் திட்டத்தை வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.

வாடிக்கையாளர்களை கவரும் வகையில், பிஎஸ்என்எல்  நிறுவனம் அளவில்லா வாய்ஸ் காலிங் சேவையில் ரூ. 99 மற்றும்      ரூ. 319 என இரண்டு  திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

டெலிகாம் சந்தையில் ஜியோவின் வருகைக்கு பின்னர் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல, டெலிகாம் சந்தையில் தொடர்ந்து பின்னடைவை சந்திக்க ஆரம்பித்தனர், இந்த போட்டியை சமாளிக்க மற்ற நிறுவனங்களும் ஜியோவைப் போலவே கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டனர்.

ஜியோவைப் போலவே, குறைந்த விலையில் அதிக டேட்டா, கேஸ்பேக் ஆஃபர்கள், ரீசார்ஜ் கூப்பன்கள் என அனைத்து வித்யாசமான அறிவிப்புகளையும் ஏர்டெல், வோடஃபோன் போன்ற மற்ற நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. இந்த போட்டி களத்தில் புதியதாக பிஎஸ்என்எல் நிறுவனமும் இணைந்துள்ளது.

டெலிகாம் சந்தையில், புதியதொரு புரட்சி செய்ய ஆயுத்தமாகி வரும் இந்நிறுவனம் தொடர்ந்து வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வருகின்றன. சமீபத்தில் பிரீப்பெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் அன்லிமடெட் காலிங் மற்றும் டேட்டா வசதியை அறிவித்திருந்தது.   அதனைத்தொடர்ந்து தற்போது ரூ. 99 மற்றும் 319 என்ற புதிய ரீசார்ஜ் திட்டத்தை வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.

வெறும் வாய்ஸ் காலிங் வாசதிக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த இரண்டு திட்டங்களில் ரூ. 99  ரீசார்ஜ் திட்டம் 26 நாட்கள் செயல்படக் கூடியது.  இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்துக் கொண்டால் வாடிக்கையாளர்கள் அளவில்லாத வாய்ஸ் காலிங் சேவையை பெறலாம்.

ரூ. 319 திட்டம் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இதில்  ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் அளவில்லாத வாய்ஸ் காலிங் வசதி மட்டும் இல்லாமல் பிடித்தமான காலர் ட்யூனையும் தேர்வு செய்து வைத்துக் கொள்ளலாம்.

×Close
×Close