பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிரடி: வேலிடிட்டி முடிந்த பின்பும் மெசேஷ் அனுப்பலாம்!

இதுவரை எந்த ஒரு டெலிகாம் நிறுவனமும் அறிவிக்காத ஒன்று

இதுவரை எந்த ஒரு டெலிகாம் நிறுவனமும் அறிவிக்காத ஒன்று

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல்

வாடிக்கையாளர்களை கவரும் வகையில்  பிஎஸ்என்எல்  நிறுவனம் தனது  போஸ்ட்பெயிட்   வாடிக்கையாளர்களுக்கு  புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Advertisment

BSNL now offers

டெலிகாம் சந்தையில் ஜியோவின் வருகைக்கு பின்பு, ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக ஏர்டெல், வோடஃபோன்,  போன்ற முன்னணி நிறுவனங்கள் பல, சந்தையில் தோல்வியை தழுவினர், இருப்பினும், தனக்கென தனி வாடிக்கையாளர்களை வைத்துள்ள பிஎஸ்என்எல் நிறுவனம், ஜியோவுடன் கடுமையாக போட்டிப்போட்டுக் கொண்டு வருகிறது.

மேலும், ஏர்செல்லின் வீழ்ச்சிக்கு பிறகு சுமார்,  15 லட்சம் வாடிக்கையாளர்கள்  பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.   இந்நிலையில்  சந்தையில் போட்டியை சமாளிக்கும் விதமாக   நாளுக்கு நாள் பிஎஸ்என்எல்  நிறுவனம்  டேட்டாவில் புதிய ஆஃபர், ரீசார்ஜ் திட்டத்தில் அதிரடியான மாற்றங்கள், ரூ 100 க்கு கீழ் புதிய ரீசார்ஜ் திட்டங்கள் என புதிய புதிய அறிவிப்புகளை அறிவித்து வருகிறது.

Advertisment
Advertisements

அந்த வகையில் தற்போது தனது போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு  ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 399 க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 100 எஸ் எம் எஸ்க்கள் வழங்கப்படுகின்றன. இனிவரும் காலங்களில் 399 பிளானின் வேலிடிட்டி முடிந்த பின்பு வாடிக்கையாளர்களால் நாள் தோறும் 100 எஸ் எம் எஸ்க்களை அனுப்ப முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தையில் ஜியோவின் போட்டியை சமாளிக்க இந்த புதிய யுக்தியை பிஎஸ்என்எல்  நிறுவனம் கையில் எடுத்துள்ளது. இதுவரை எந்த ஒரு டெலிகாம் நிறுவனமும் பிளான் முடிந்த பின்பும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் வகையில் இதுப் போன்ற அறிவிப்பினை வெளியிட்டது இல்லை.

Bsnl

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: