bsnl offers : டெலிகாம் துறையில் மற்ற நிறுவனங்களுக்கு போட்டியாக பிஎஸ்என்எல் நிறுவனம், பல்வேறு புதிய அறிவிப்புகளையும் வழங்கி வருகின்றது. இதில் தினமும் 2.2ஜிபி, வாய்ஸ்கால், 100 எஸ்எம்எஸ் மற்றும் கூடுதல் டேட்டாவையும் வழங்கி தெறிக்கவிட்டுள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.
பிஎஸ்என்எல் நிறுவனம் யாரும் எதிர்பாராத வகையில் கூடுதல் டேட்டா சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனமானது தனது வாடிக்கையாளர்கள் சில வவுட்டர்கள் மீதான கூடுதல் டேட்டா சலுகைகளை வழங்கியுள்ளது.
பிஎஸ்என்எல் கொடுத்துள்ள இந்த ஆஃபரில் 9 ஜிபி முதல் 15 ஜிபி வரையிலான கூடுதல் டேட்டா வழங்கப்படும். கூடுதல் டேட்டா சலுகை ஆனது வருகிற செப் 15 ஆம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.
இந்த கூடுதல் டேட்டா ரூ.186, ரூ.446, ரூ.485, ரூ.666, ரூ.1,699 மற்றும் சிறப்பு கட்டண வவுச்சர்கள் (எஸ்.டி.வி) ஆன ரூ.187, ரூ.349, ரூ.399, மற்றும் ரூ.429 ஆகிய திட்டங்களில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கூடுதலாக புதிய அறிவிப்பாக எஸ்டிவி 187 திட்டத்தை அறிவித்துள்ளது பிஎஸ்என்எல். இதன் விலை ரூ.187 ஆகும்.இதில், 250 நிமிட உள்ளூர், எஸ்.டி.டி மற்றும் ரோமிங் அழைப்புகளை வழங்கும், இதில் மும்பை மற்றும் டெல்லிக்கு அழைப்பு வட்டங்களுக்கும் பொறுந்தும். ஒரு நாளைக்கு 2 ஜிபி தரவுக்குப் பிறகு வேகம் 40 கே.பி.பி.எஸ் வரை குறைக்கப்படும். வரம்பற்ற தரவுகளும் இருக்கும்.
இந்த திட்டத்தில் கூடுதலாக தினசரி 4.2 ஜிபி வரை கூடுதலாக வழங்குகின்றது. மேலும், பம்பர் ஆப்பராக வழங்கப்படும் ஜிபியுடன் சேர்ந்து 2.2 ஜிபியை வழங்குகின்றது பிஎஸ்என்எல் நிறுவனம்.