பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 666 ரூபாய் பிளானை மாற்றியமைத்துள்ளது. அதன்படி, எல்லையில்லா வாய்ஸ் காலிங், ஒரு நாளைக்கு 1.5ஜிபி டேட்டா ஆகிய வசதிகளுடன் 122 நாள் வேலிடிட்டி கொண்டுள்ளது. தவிர, 122 நாட்களுக்கு, ஒரு நாள் வீதம் 100 எஸ்எம்எஸ் இலவசமாக கொடுக்கப்படுகிறது. இதற்கு முன்பாக, இதே 666 ரூபாய் பிளான், 129 நாட்கள் வேலிடிட்டியோடு கொடுக்கப்பட்டது. ஜூன் 2017ம் ஆண்டு ரூ.333 மற்றும் ரூ.444 ப்ரீபெய்டு பிளான்கள் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு இந்த 'சிக்ஸர் 666' எனும் புதிய திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்தது.
மற்ற சலுகைகளில், மாற்றியமைக்கப்பட்ட ரூ.666 பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் எல்லையில்லா உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை வழங்குகிறது. டெல்லி மற்றும் மும்பை பகுதிக்கு இந்த அழைப்பு சலுகை பொருந்தாது. மேலும், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், தினம் 1.5GB டேட்டா வழங்கப்படுகிறது.
இந்த மாற்றியமைக்கப்பட்ட ரூ.666 பிளானில், பிஎஸ்என்எல் தற்போது வழங்கிக் கொண்டிருக்கும் கூடுதல் டேட்டாவையும் பயனர்கள் அனுபவிக்கலாம். ஏப்ரல் 30 வரை, இந்த கூடுதல் டேட்டாவை பெறலாம். இதன் மூலம், தினம் 1.5GB என்ற கணக்கில் இருந்து தினம் 3.7GB என்ற அளவில் கூடுதல் டேட்டாக்கள் பெறலாம். அளிக்கப்பட்ட டேட்டா முடிந்த பிறகு, 40Kbps வேகத்தில் அன்லிமிட்டட் இன்டர்நெட் பயன்படுத்தலாம்.
கடந்த வாரம், பிஎஸ்என்எல் ரூ.349க்கான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை மாற்றியமைத்தது. இதன் மூலம், வழக்கமான 54 நாட்கள் வேலிடிட்டியில் இருந்து, 10 நாட்கள் கூடுதலாக அதிகரிக்கப்பட்டது. மேலும், ஒரு நாளைக்கு 1 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டட் அழைப்புகள், தினம் 100 எஸ்எம்எஸ் போன்றவை இதன் அம்சங்களாகும்.