/tamil-ie/media/media_files/uploads/2020/07/a192.jpg)
BSNL rs 2399 plan, BSNL chennai, BSNL tamil nadu, BSNL prepaid plans, பிஎஸ்என்எல், BSNL News
BSNL Tamil News: பிஎஸ்என்எல் ரூபாய் 2,399/-க்கான ப்ரீபெய்ட் பிளான் வவுச்சரை சென்னை, தமிழ்நாடு வட்டங்களில் 600 நாட்கள் வேலிடிட்டியுடன் அறிமுகப்படுத்தியுள்ளது
பிஎஸ்என்எல் (BSNL) ஒரு நீண்ட கால ப்ரீபெய்ட் திட்ட வவுச்சரை ரூபாய் 2,399/- க்கு கொண்டுவந்துள்ளது. சென்னை மற்றும் தமிழ்நாடு தொலைதொடர்பு வட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வவுச்சர் 600 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.
— BSNL_Chennai (@BSNL_CHTD) July 1, 2020
இந்த வவுச்சரில் நியாயமான பயன்பாட்டுக் கொள்கை எனப்படும் fair usage policy (FUP)யில் 250 நிமிடங்கள் அளவில்லாத வாய்ஸ் கால்கள் செய்யும் வசதி, நாள் ஒன்றுக்கு 100 இலவச SMS அனுப்பும் வசதியும் உள்ளது. இருப்பினும் இந்த திட்டத்தின் கீழ் டேட்டா நன்மைகள் எதுவும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்காது.
8% வட்டி.. இதை விட வேற என்ன வேணும்? பிரபல வங்கி அதிரடி!
இந்த திட்டத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் செய்த நாளிலிருந்து முதல் 60 நாட்களுக்கு personalised ring back tones (PRBT) அனுகும் வசதி வழங்கப்படும்.
GSM போஸ்ட் பெய்ட் கைபேசி சேவைகளின் கீழ் ரூபாய் 149/- மற்றும் ரூபாய் 725/- ஆகிய திட்டங்களை சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டங்களில் திரும்ப பெறுவதாக பிஎஸ்என்எல் சென்னை தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு மூலமாக தெரிவித்துள்ளது.
— BSNL_Chennai (@BSNL_CHTD) July 1, 2020
சட்டீஸ்கர் வட்டத்தில் பிஎஸ்என்எல் கடந்த மே மாதம் ரூபாய் 2,399/- மற்றும் ரூபாய் 699/- க்கான ப்ரீபெய்ட் திட்ட வவுச்சர்களை தொடங்கியது. 180 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் ரூபாய் 699/- திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 250 நிமிடங்கள் டாக்டைம், தினசரி 100 SMS மற்றும் தினசரி 0.5GB டேட்டா ஆகியவை வழங்கப்பட்டது.
இந்தியன் வங்கியில் லோன் வாங்கியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
இரண்டு மாதங்களுக்கு முன்பு, பிஎஸ்என்எல் குறிப்பிட்ட சில Special Tariff Vouchers (STVs) மற்றும் Plan Vouchers (PVs) களில் அளவில்லாத வாய்ஸ் காலிங் மற்றும் SMS பயன்களை திருத்தியமைத்துள்ளது.
ரூபாய் 99/-, ரூபாய் 104/-, ரூபாய் 349/-, மற்றும் ரூபாய் 447/- ரீசார்ஜ் திட்டங்களுக்கு வாய்ஸ் காலிங் பயன்களை சென்னை மண்டலம் விரிவுப்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.