பி.எஸ். என்.எல் அதிரடி: ரூ. 118 க்கு அளவில்லாத வாய்ஸ் காலிங் மற்றும் டேட்டா வசதி!

இந்த போட்டியில் ஜியோவை மிஞ்சும் அளவிற்கு பிஎஸ்என்எல் நிறுவனம் அடுத்தடுத்த ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்தது.

By: Updated: April 2, 2018, 11:14:08 AM

டெலிகாம்  நிறுவனத்தில் கடுமையான போட்டியை சந்தித்து வரும் பிஎஸ்என்எல் நிறுவனம், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ரூ. 118 ரீசார்ஜ் திட்டத்தில் புதிய ஆஃப்ர் ஒன்றை  அறிவித்துள்ளது.

டெலிகாம் சந்தையில் ஜியோவின் வருகைக்கு பின்பு, நிகழ்ந்த  மாற்றங்கள் ஏராளம். குறிப்பாக ஏர்டெல், வோடஃபோன், ஏர்செல்  போன்ற முன்னணி நிறுவனங்கள் பல, சந்தையில் தோல்வியை தழுவினர். ஏர்செல் நிறுவனம் இந்த மாதத்துடன் தனது கடையை மூடிகிறது.

இந்நிலையில், சந்தையில் உள்ள போட்டியை சமாளிக்க பிஎஸ்என்எல்  நிறுவனம்  வாடிக்கையாளர்களுக்கு புதிய புதிய ஆஃபர்களை அறிவித்தது. தனக்கென தனி வாடிக்கையாளர்களை வைத்துக் கொண்டு பிஎஸ்என்எல் நிறுவனம், ஜியோவுடன் கடுமையாக போட்டிப்போட்டுக் கொண்டு வருகிறது.

இதன் பயனாக வாடிக்கையாளர்கள் மத்தியில், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு  நல்ல வரவேற்பு கிடைத்தது.  இந்த போட்டியில் ஜியோவை மிஞ்சும் அளவிற்கு பிஎஸ்என்எல் நிறுவனம் அடுத்தடுத்த ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்தது. ஏர்செல்லின் வீழ்ச்சிக்கு பின்பு, சுமார் 15 லட்சம் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் பக்கம் சென்றுவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பிஎஸ்என்எல்  நிறுவனம் ரூ, 118 ரீசார்ஜ் திட்டத்தில் புதிய  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, ரூ. 118 க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா, அளவில்லாத வாய்ஸ் காலிங் சேவை மற்றும் இலவச எஸ்எம்எஸ் வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

 

 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Bsnl unveils stv 118 with unlimited voice calling 1gb data here are the details

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X