வாடிக்கையாளர்களை கவரும் வகையில், பிஎஸ்என்எல் நிறுவனம் அடுத்த அதிரடி அறிவிப்பாக ரூ. 98 ரீசார்ஜ் திட்டத்தில் புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது.
டெலிகாம் சந்தையில் ஜியோவின் வருகைக்கு பின்பு, ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக ஏர்டெல், வோடஃபோன், போன்ற முன்னணி நிறுவனங்கள் பல, சந்தையில் தோல்வியை தழுவினர், இருப்பினும், தனக்கென தனி வாடிக்கையாளர்களை வைத்துள்ள பிஎஸ்என்எல் நிறுவனம், ஜியோவுடன் கடுமையாக போட்டிப்போட்டுக் கொண்டு வருகிறது.
மேலும், ஏர்செல்லின் வீழ்ச்சிக்கு பிறகு சுமார், 15 லட்சம் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சந்தைடில் போட்டியை சமாளிக்கும் விதமாக நாளுக்கு நாள் பிஎஸ்என்எல் நிறுவனம் டேட்டாவில் புதிய ஆஃபர், ரீசார்ஜ் திட்டத்தில் அதிரடியான மாற்றங்கள், ரூ 100 க்கு கீழ் புதிய ரீசார்ஜ் திட்டங்கள் என புதிய புதிய அறிவிப்புகளை அறிவித்து வருகிறது.
இந்நிலையில், நேற்றைய தினம் மற்றொரு புதிய அறிவிப்பை பிரீப்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. அதன்படி, ரூ. 98 க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா வழங்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது. 26 நாட்கள் மட்டுமே செயல்படும் இந்த திட்டத்தில், இதற்கு முன்பு வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்பட்டிருந்தது.
தற்போது இதை மாற்றம் செய்து நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவாக அதிகப்படுத்தியுள்ளது. இதைத்தவிர பிஎஸ்என்எல் -னின் ரூ. 36 ரீசார்ஜ் திட்டமும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளனர்.