scorecardresearch

Budget 2023: நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி; நிர்மலா சீதாராமன்

2023-2024 பட்ஜெட் உரையில், நகர்ப்புற திட்டமிடல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள நகரங்கள் ஊக்குவிக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

Budget 2023
Budget 2023: Urban Infrastructure Development Fund of Rs 10000 crore per year to be set up

நாடு முழுவதும் உள்ள டயர்-2 மற்றும் டயர் -3 நகரங்களில் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்காக, ஆண்டுக்கு ரூ.10000 கோடி நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியை மத்திய அரசு அமைக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை தனது 2023-2024 பட்ஜெட் உரையில் அறிவித்தார்.

முன்னுரிமைத் துறை கடன் பற்றாக்குறையைப் பயன்படுத்தி இந்த நிதி நிறுவப்படும் என்று நிதி அமைச்சர் கூறினார்.

இது தேசிய வீட்டுவசதி வங்கியால் நிர்வகிக்கப்படும், டயர் -2 மற்றும் டயர் -3 நகரங்களில் நகர்ப்புற உள்கட்டமைப்பை உருவாக்க பொது நிறுவனங்களால் பயன்படுத்தப்படும்.

15வது நிதிக் குழுவின் மானியங்களிலிருந்தும், ஏற்கனவே உள்ள திட்டங்களிலிருந்தும் வளங்களைப் பயன்படுத்தி, நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியை (UIDF) அணுகும்போது பொருத்தமான பயனர் கட்டணங்களைப் பின்பற்றுவதற்கு மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும். இதற்காக ஆண்டுக்கு ரூ. 10,000 கோடி ரூபாய் செலவிடப்படும், என்றார்.

நகர்ப்புற திட்டமிடலில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் மாநிலங்களும் நகரங்களும் ஊக்குவிக்கப்படும் என்றும் நகரங்களை மேலும் நிலையானதாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதன் பொருள் நில வளங்களை திறம்பட பயன்படுத்துதல், நகர்ப்புற உள்கட்டமைப்புக்கு போதுமான ஆதாரங்கள், போக்குவரத்து சார்ந்த மேம்பாடு, நகர்ப்புற நிலத்தின் மேம்பட்ட கிடைக்கும் தன்மை மற்றும் மலிவு மற்றும் அனைவருக்கும் வாய்ப்புகள் ஆகியவை ஆகும் என்று நிர்மலா கூறினார்.

சீர்திருத்தங்களில் சொத்து வரி நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்புக்கான ரிங்-ஃபென்சிங் பயனர் கட்டணங்கள் ஆகியவை அடங்கும். முனிசிபல் பத்திரங்களுக்கான கடன் தகுதியை மேம்படுத்த நகரங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

மேலும் சுகாதாரம் குறித்து அவர் கூறுகையில்: அனைத்து நகரங்களிலும் செப்டிக் டேங்க் மற்றும் சாக்கடைகளை  100 சதவீதம் இயந்திர ரீதியில் அகற்றும் பணி செயல்படுத்தபடும். உலர் மற்றும் ஈரமான கழிவுகளை அறிவியல் பூர்வமாக மேலாண்மை செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Budget 2023 nirmala sitharaman urban infrastructure development fund