அயோத்தியில், புதிய ராமர் கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு தலைமை தாங்கி அயோத்தியில் இருந்து திரும்பிய சிறிது நேரத்திலேயே, பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 22 அன்று ‘பிரதான்மந்திரி சூர்யோதயா யோஜனா’ அறிவித்தார்.
அப்போது, ஒரு கோடி வீடுகளில்" மேற்கூரை சோலார் சிஸ்டம் நிறுவப்படும் என்று மோடி கூறினார்.
இந்தப் புதிய திட்டத்தின் முழு விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. இருப்பினும், நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவச சோலார் மின்சாரத்தைப் பெறுவதன் மூலமும், உபரி மின்சாரத்தை விற்பனை செய்வதன் மூலமும் "ஆண்டுக்கு ரூ. 15,000-18,000 வரை சேமிக்க முடியும்" என்று கூறினார்.
தொடர்ந்து, அரசின் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேற்கூரை சோலார் திட்டத்தில் பயன்பெறும் மக்களுக்கு மாதந்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும், ஆண்டுக்கு 18,000 ரூபாய் வரை சேமிக்க உதவும் என்றும் கூறினார்.
வீட்டிலேயே சார்ஜிங் நிலையங்களை வழங்குவதன் மூலம் மின்சார வாகனங்களை (EV) ஏற்றுக்கொள்ளவும் இந்த திட்டம் உதவும் என்று நிதி அமைச்சர் கூறினார். இந்த திட்டம் தொழில்முனைவோர் மற்றும் வேலை வாய்ப்புகளை விநியோகம், நிறுவல் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் விளைவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என்றார்.
இது குறித்து, டெல்லியை தளமாகக் கொண்ட எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சிலின் (CEEW) மூத்த தலைவர் நீரஜ் குல்தீப், “ஒரு கோடி வீடுகளின் கூரை சூரியமயமாக்கல் சுமார் 20-25 GW புதிய திறனை நிறுவுவதற்கு வழிவகுக்கும்“ என்றார்.
மேலும், “குடியிருப்பு நுகர்வோர் டிஸ்காம்களில் இருந்து மானிய விலையில் மின்சாரம் பெறுவதால், இந்த வீடுகளின் தேவையை சூரியமயமாக்குவதன் மூலம் அடுத்த 25 ஆண்டுகளில் (சோலார் ஆலையின் ஆயுள்) டிஸ்காம்களுக்கு சுமார் ரூ.2 லட்சம் கோடி சேமிக்கப்படும்.
அனைத்து மாநிலங்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம், ஏனெனில் சூரிய ஒளியின் மேற்கூரை சாத்தியம் எல்லா இடங்களிலும் உள்ளது, இது ஒரு சில மாநிலங்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது” என்றார்.
ஆங்கிலத்தில் வாசிக்க : Budget 2024: Rooftop solar scheme: Households to get 300 units free power, ‘save up to Rs18,000 a year’
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“