மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு டிஜிட்டல் மற்றும் ஹைடெக் சேவைகளை வழங்குவதற்கான பொது-தனியார் கூட்டு முறையில் (பி.பி.பி) புதிய திட்டத்தை அறிவித்தார்.
“பொதுத்துறை ஆராய்ச்சி மற்றும் அதன் விரிவாக்க நிறுவனங்களுடன் இணைந்து விவசாயிகளுக்கு டிஜிட்டல் மற்றும் ஹைடெக் சேவைகளை வழங்குவதற்காக, தனியார் வேளாண் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் வேளாண் மதிப்பு தொடர்பான பங்குதாரர்களுடன், பொது-தனியார் கூட்டு முறையில் ஒரு திட்டம் தொடங்கப்படும்” என்று மக்களவையில் பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் கூறினார்.
மேலும், நிர்மலா சீதாராமன் கூறுகையில், “கூட்டு முதலீட்டு மாதிரியின் கீழ் திரட்டப்பட்ட கலப்பு மூலதனத்துடன் கூடிய நிதி, நபார்டு மூலம் எளிதாக வழங்கப்படும். இது விவசாயம் மற்றும் கிராமப்புற நிறுவனங்களுக்கான ஸ்டார்ட்-அப்களுக்கு நிதியளிக்கும். இது வேளாண் விளைபொருட்களின் மதிப்பு சம்பந்தமாக தொடர்புடையது. இந்த ஸ்டார்ட்-அப்களுக்கான செயல்பாடுகளில், விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கான (எஃப்.பி.ஓ – FPO) ஆதரவு, பண்ணை அளவில் விவசாயிகளுக்கு வாடகை அடிப்படையில் இயந்திரங்கள், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த உதவி உள்ளிட்ட தொழில்நுட்ப உதவிகளும் அடங்கும்.” என்று கூறினார்.
பயிர் மதிப்பீடு, நிலப் பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்குதல், பூச்சிக்கொல்லிகள் தெளித்தல், ஊட்டச்சத்துக்களுக்கு ‘கிசான் ட்ரோன்’ பயன்பாடு ஊக்குவிக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
விவசாய அமைச்சகத்தின் பல திட்டங்கள் அவற்றின் ஒதுக்கீட்டில் குறைக்கப்பட்டிருப்பது அல்லது ஓரளவு அதிகரித்திருப்பதை பட்ஜெட் ஆவணங்கள் காட்டுகின்றன.
உதாரணமாக, 2022-23 மத்திய பட்ஜெட்டில் பிரதமரின் கிசான் சம்மான் நிதிக்கு (பிஎம்-கிசான்) அரசாங்கம் ரூ. 68,000 கோடியை ஒதுக்கியுள்ளது. இது 2021-22-க்கான பட்ஜெட் மதிப்பீடாக ரூ.65,000 கோடியைவிட வெறும் 4.6 சதவீதம் அதிகம். நடப்பு நிதியாண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளின்படி ரூ.67,500 கோடியைவிட 0.74 சதவீதம் மட்டுமே அதிகம்.
பி.எம் கிசான் திட்டத்தின்கீழ், தகுதியான விவசாயி பயனாளி குடும்பங்களுக்கு, 4-மாதத்திற்கு ஒருமுறை என தலா 2,000 ரூபாய் 3 தவனையாக ஒரு வருடத்திற்கு ரூ.6,000 அரசாங்கம் வழங்குகிறது. பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர்-கிசானின் 10வது தவணையை ஜனவரி 1, 2022 அன்று வெளியிட்டார். நாடு முழுவதும் உள்ள 10.09 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.20,946 கோடி செலுத்தப்பட்டுள்ளது.
பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) ஒதுக்கீடாக 2022-23 நிதியாண்டில் ரூ.15,500 கோடியாக வைக்கப்பட்டுள்ளது. இது 2021-22க்கான பட்ஜெட் மதிப்பீடு ரூ.16,000 கோடியாக இருந்தது. தற்போதைய நிதி ஆண்டுக்கான ரூ.15,989 கோடிக்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளை விடக் குறைவு. இதேபோல், சந்தை தலையீடு திட்டம் மற்றும் விலை ஆதரவு திட்டம் (எம்ஐஎஸ்-பிஎஸ்எஸ்) ஒதுக்கீடு RE 2021-22ல் ரூ.3,595.61 கோடியிலிருந்து 2022-23ல் ரூ.1,500 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாய் யோஜனா (PMKSY)- ஒரு விதை அதிக மகசூலுக்காக பட்ஜெட் RE 2021-22-ல் ரூ.4,000 கோடியிலிருந்து 2022-23 இல் ரூ.2,000 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
“நாம் எண்ணெய் வித்துக்களின் இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைக்க, எண்ணெய் வித்துக்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க முறைப்படுத்தப்பட்ட மற்றும் விரிவான திட்டம் செயல்படுத்தப்படும்” என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
2021-22 ரபி பருவத்தில் கோதுமை கொள்முதல் மூலமும், 2021-22 கரீஃப் பருவத்தில் நெல் கொள்முதலின் மூலமும் 163 லட்சம் விவசாயிகளிடமிருந்து 1208 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் நெல் கிடைக்கும். அதற்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக (எம்எஸ்பி) ரூ.2.37 லட்சம் கோடி அவர்களின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக செலுத்த வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
வேளாண் ஸ்டார்ட்-அப்களுக்கான பொது – தனியார் கூட்டு திட்டம்
கூட்டு முதலீட்டு மாதிரியின் கீழ் திரட்டப்பட்ட கலப்பு மூலதனத்துடன் கூடிய நிதி, நபார்டு மூலம் எளிதாக வழங்கப்படும். இது விவசாயம் மற்றும் கிராமப்புற நிறுவனங்களுக்கான ஸ்டார்ட்-அப்களுக்கு நிதியளிக்கும். இது வேளாண் விளைபொருட்களின் மதிப்பு சம்பந்தமாக தொடர்புடையது. இந்த ஸ்டார்ட்-அப்களுக்கான செயல்பாடுகளில், விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கான (எஃப்.பி.ஓ – FPO) ஆதரவு, பண்ணை அளவில் விவசாயிகளுக்கு வாடகை அடிப்படையில் இயந்திரங்கள், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த உதவி உள்ளிட்ட தொழில்நுட்ப உதவிகளும் அடங்கும்.
நாடு முழுவதும் ரசாயனமற்ற இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்தார். முதற்கட்டமாக கங்கை நதிக்கரையோரம் உள்ள 5 கி.மீ அகலமான கரையோரப் பகுதிகளில் விவசாயிகளின் நிலங்களை மையமாகக் கொண்டு ரசாயனமற்ற இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும்.
இயற்கை, ஜீரோ பட்ஜெட், இயற்கை விவசாயம், நவீன விவசாயம், மதிப்புக் கூட்டல் மற்றும் மேலாண்மை ஆகியவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்ய விவசாயப் பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்களைத் திருத்துவதற்கு மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
விவசாயிகள் பொருத்தமான பழங்கள் மற்றும் காய்கறிகளை ஏற்றுக்கொள்வதற்கும், பொருத்தமான உற்பத்தி மற்றும் அறுவடை நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கும், மாநில அரசுகளின் பங்களிப்புடன் ஒரு விரிவான தொகுப்பை அரசாங்கம் வழங்கும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
மேலும், வேளாண் வனவளம், தனியார் வனவளத்தை மேம்படுத்துவதற்கான கொள்கைகள், தேவையான சட்ட மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும் அவர் அறிவித்தார். மேலும், வேளாண் காடுகளை அமைக்க விரும்பும் பட்டியல் பிரிவினர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும்” என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“