கரடியை துரத்திய காளை; மும்பை பங்குச் சந்தை 1276 புள்ளிகள் உயர்வு..! | Indian Express Tamil

கரடியை துரத்திய காளை; மும்பை பங்குச் சந்தை 1276 புள்ளிகள் உயர்வு..!

இந்திய பங்குச் சந்தைகள் 2 சதவீதத்துக்கும் மேல் லாபம் பார்த்துள்ளன.

கரடியை துரத்திய காளை; மும்பை பங்குச் சந்தை 1276 புள்ளிகள் உயர்வு..!
இந்திய பங்குச் சந்தை

இந்தியப் பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தை உயர்வுடன் நிறைவு செய்த போதிலும், மும்பை பங்குச் சந்தையில் சன் பார்மா பங்குகள் ஆட்டம் கண்டன.

இன்றைய பங்கு வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை 1276.66 (2.25 சதவீதம்) உயர்ந்து சென்செக்ஸ் 58065.47 ஆக நிறைவுற்றது.
ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், பார்தி ஏர்டெல், ஹெச் சி எல் டெக், ஹெச் டி எஃப்சி, இந்துஸ்தான் உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்தில் இயங்கின.
பி.எஸ்.இ.,யில் மொத்தமுள்ள 30 பங்குகளில் டாக்டர் ரெட்டிஸ் லேப், பவர் கிரிட் கார்ப், சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் மட்டும் நஷ்டத்தை சந்தித்தன.

தேசிய பங்குச் சந்தையை பொறுத்தமட்டில் நிஃப்டி 386.95 (2.29%) உயர்ந்து, 17274.30 ஆக காணப்படுகிறது. 50 பங்குகள் கொண்ட இந்தச் சந்தையில் டாக்டர் ரெட்டிஸ் லேப் மற்றும் பவர் கிரிட் கார்ப் பங்குகள் மட்டும் சரிந்தன.
மீதமுள்ள பங்குகள் லாபத்தில் இயங்கின. இன்று (அக்.4) இந்திய பங்குச் சந்தைகள் 2 சதவீதத்துக்கும் மேல் லாபம் பார்த்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Bulls charge back as market gains over 2 percentage

Best of Express