8,75,000 ரூ. வரை மானியம்! PMEGP ஸ்கீம் பற்றி தெரியுமா உங்களுக்கு?

கடனுதவி பெறுவதற்கு www.kviconline.gov.in/Dic என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

By: Updated: July 16, 2020, 05:08:48 PM

business in tamil pmegp loan : கடனுக்காக விண்ணப்பிக்கும் போதே உங்களுக்கு PMEGP ஸ்கீமில் ரூ. 8,75,000 வரை மானியம் வழங்கப்படும் தெரியுமா? இதுவரை தெரியாதவர்கள் தெரிந்துக் கொள்ளுங்கள். PMEGP ஸ்கீம் பற்றி முழுமையாக தெரிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

PMEGP ஸ்கீம் :

1. பிரதம மந்திரியின் வேலைவாயப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP) கீழ் உற்பத்தி மற்றும் சேவை நிறுவனம் துவங்குவதற்கு அதிகபட்சமாக ரூ.25.00 லட்சம் மற்றும் ரூ.10.00 லட்சம் கடனுதவி வழங்கப்படும்.

2. உற்பத்தி பிரிவின் கீழ் 10 லட்ச ரூபாய்கு மேற்பட்ட திட்டங்களுக்கும், சேவைப்பரிவின் கீழ் 5 லட்ச ரூபாய் மேற்பட்ட திட்டங்களுக்கும் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குடும்பத்தில் ஒருவருக்கு தொழில் தொடங்க கடன்… ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!

3. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பொதுப்பிரிவு பயனாளிகள் சொந்த முதலீடாக திட்ட மதிப்பீட்டில் 10 மற்றும் சிறப்பு பிரிவினரான ஆதிதிராவிடர்/ பழங்குடியினர்/பெண்கள் சிறுபான்மையினர்/ முன்னாள் இராணுவத்தினர்/மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் 5/- பங்களிக்க வேண்டும்.

4. இதரப பிற்படுத்தப்பட்டோர் அரசு மானியமாக தொழில் துவங்கவிருக்கும் இடம் (நகர்புறம் மற்றும் கிராமப்புறம்) மற்றும் (பொது மற்றும் சிறப்பு) பிரிவுக்கு ஏற்ப 15/- முதல் 35/- வரை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய கடனுதவி பெறுவதற்கு www.kviconline.gov.in/Dic என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். படித்து முடித்த பின்பு நீங்களே உங்கள் சொந்த காலில் நிற்கலாம். அதுமட்டுமில்லை வேலை வாய்ப்பை பெருக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Business in tamil pmegp loan pmegp loan bank pmegp loan apply pmegp loan bank list

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X