business investment tamil, money investment : சுய தொழில் செய்தால் கண்டிப்பாக ஒரு நாள் நீங்களும் தொழில் அதிபர் ஆகலாம்.ஆனால் இந்த சமூகம் சுய தொழில் செய்தால் வருமானம் குறைவாக கிடைக்கும்.மற்றவர்கள் உன்னை மதிக்க மட்டார்கள் என கூறி உங்கள் முன்னேற்றத்தை தடுப்பார்கள் அதனை உடைத்தெரிந்து வெளி வருபவர்களுக்கே வெற்றி நிச்சயம். இன்றைய சூழலில் பணத்திற்கு தரும் மதிப்பு மனிதர்களுக்கு தருவதில்லை. எப்படியாவது பணக்காரன் ஆகிவிட வேண்டும். எப்படியாவது லட்டம் லட்சமாக சம்பாதித்து வீடு, கார், பங்களா என செட்டில் ஆகி விட வேண்டும் என்பது தான் பலரின் கனவும். இந்த பணத்திற்காக தான் இவ்வளவும்.
Advertisment
தொழில்களுக்கு அதிக அளவில் முதலீடு செய்ய தேவையில்லை, சிந்தித்து செயல்ப்பட்டால் கூடுதல் லாபம் காண முடியும். எடுத்துக்காட்டாக வீட்டில் இருந்த படியே செய்யும் பல தொழிலில் அதிக முதலீடு தேவைபடுவதில்லை. இணையத்தளத்தின் உதவி கொண்டு உட்கார்ந்து இருந்த படியே பல தொழிலை செய்ய முடியும். அப்படி குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழில்களை பார்க்கலாம் வாங்க.
1. ஹைப்ரிட் பிளான் : இந்த திட்டம் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வங்கி நிறுவனங்களிலும் பங்கு சந்தையிலும் முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் லாபத்தை கொண்டு வாடிக்கையாளர்களுக்கு மாத வருமானமாக வழங்கப்படுகிறது.
மாத வருமானம் எதிர்பார்ப்பவர்களுக்கு இது சிறந்த திட்டமாகும். இந்த மாத வருமான திட்டத்தை பல்வேறு நிறுவனங்கள் செயல்படுத்தி வருகின்றன. நிபுணத்துவத்தோடு செயல்படும் நிறுவனங்கள் நல்ல லாபம் சம்பாதித்து வாடிக்கையாளர்களுக்கு அதிக வட்டி வருமானத்தை அளித்து வருகின்றன. ரிலையன்ஸ் இந்தியா, பிராங்க்ளின் இந்தியா, பிர்லா சன் லைப் போன்ற நிறுவனங்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாத வருமான லாபத்தை அளிக்கின்றன. `
2. பணத்தை மிகச்சிறந்த முறையில் முதலீடு செய்யும் முறை. ஸ்பைஸ் இந்தியா நிறுவனம் பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். கடந்த 8 ஆண்டுகளாக சிறந்த முதலீடுகள் ஸ்பைஸ் இந்தியாவில் இருந்து வந்தவையே ஆகும். இந்த நிறுவனத்தில் 1 லட்சம் மட்டுமே நீங்கள் முதலீடு செய்தால் மாதந்தோறும் 6,000 பெறலாம். இதன் மூலம் 12 மாதங்களுக்கும் ஒப்பந்தப்படி மாதந்தோறும் 6000 ரூபாய் வீதம் அளிக்கப்படும். பின்னர், ஒப்பந்தம் முடிந்த பின் ஒரு லட்சம் ரூபாய் பணம் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
நீங்கள் முதலீடு செய்யும் பணம் தேயிலை வியாபாரம், ஆன்லைன் சேல், போன்ற பல தொழில்களில் பிரித்து முதலீடு செய்யப்படும். பின்பு அதில் வரும் லாபத்தில் இருந்து உங்களுக்கு மாதந்தோறும் ரூ. 6000 வழங்கப்படும். நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த முதலீடுகள் செய்யப்பட்டு வருகின்றன. உங்களுக்கு விருப்பம் இருந்தாலும் நீங்கள் தெளிவான ,விரிவான தகவல்களை பெற்றுக் கொண்டு இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து லாபத்தை மேலும் பெருக்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil