Business news Importance of credit score in getting a loan : ஒரு அவசரத்திற்கு கடன் தேவை, வங்கிக்கு செல்ல வேண்டும். ஏற்கனவே நாம் கடன் வழங்கும் நிறுவனங்கள் அல்லது வங்கிகளில் கடன் ஏதேனும் வாங்கியிருந்தால் நாம் அதனை எப்படி திருப்பி செலுத்தினோம், நம்முடைய கிரெடிட் ஸ்கோர் என்ன என்பதன் அடிப்படையில் தான் நமக்கு புதிய லோனே கிடைக்கும். இது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனாலும் ஒரு மிகப்பெரிய தேவைக்காக நீங்கள் வங்கிகளை அணுகும் போது இந்த கிரெடிட் ஸ்கோர் எத்தகைய பங்காற்றுகிறது என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.
கிரெடிட் ஸ்கோர் 300-900 வரை வழங்கப்படுகிறது. பொதுவாக நல்ல மதிப்பாக கருதப்படுவது 700 முதல் 900 வரையில் இருக்கும் ஸ்கோர்கள் தான். அதிக அளவு கிரெடிட் ஸ்கோர் அதிக அளவில் கடனை பெறுவதற்கான நல்ல சாத்தியக் கூறுகளை வழங்குகிறது.
அதிக கிரெடிட் ஸ்கோர் உடைய நபர் விதிகளை மீறமாட்டார் . எனவே வங்கிகளும் தங்களின் பணத்தை இழக்கும் அபாயத்தை கொண்டிருக்காது. குறைந்த ஆபத்து குறைவான வட்டிக்கு வழிவகை செய்யும் என்று கூறுகிறார் எக்ஸ்பெரியன் இந்தியாவின் எம்.டி. நீரஜ் தவான். ன் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவது கிரெடிட் விண்டேஜ் மற்றும் ஸ்கோரை உருவாக்கி, பெரிய தேவைகளுக்கும் அதிக கடன் தொகைக்கும் கடன் வாங்க அனுமதிக்கும். நல்ல கிரெடிட் ஸ்கோரை வைத்திருப்பது பெரிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை தங்கள் கடன் தேவைகளுக்காக அணுக அனுமதிக்கும் என்றும் அவர் கூறுகிறார்.
கிரெடிட் ஸ்கோரை 750க்கு மேல் வைத்திருப்பதால் ஏற்படும் நன்மை என்ன தெரியுமா?
750 அல்லது அதற்கு மேல் கிரெடிட் ஸ்கோரை வைத்திருக்கும் நபர்களுக்கு சிறப்பு சலுகைகளை கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் வழங்கும். இது எளிய முறையில் கடனை பெறுவதற்கு மட்டுமின்றி வட்டி, ப்ரோசசிங் கட்டணம் போன்றவற்றிலும் தள்ளுபடியை வழங்கும்.
ஒரு நல்ல கிரெடிட் ஸ்கோர் குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களைப் பெற உதவும். கடனளிப்பவர் பணத்தை இழக்கும் அபாயம் குறைவாக இருப்பதால், இது பொதுவாக குறைந்த வட்டி விகிதங்களாக மாற்றப்படுகிறது.
உங்கள் ஸ்கோர் சிறப்பாக இருந்தால், அதிக கடனை நீண்ட காலத்தில் திருப்பி செலுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.
அதிக கிரெடிட் ஸ்கோரைக் கொண்டவரின் விண்ணப்பம் உடனடியாக கடன் பெறுவதற்கான செயல்முறைக்கு பரிந்துரைக்கப்படும் ஏன் என்றால் இந்த ஸ்கோர் மூலம் செலுத்துவதற்கான நம்பகத்தன்மை ஏற்கனவே சரிபார்க்கப்பட்டுள்ளது.
நல்ல கிரெடிட் ஸ்கோருடன் இருக்கும் நபருக்கு வங்கி மற்றும் நிறுவனங்கள் கடன் கொடுக்க ஒப்புக் கொண்டால் குறைந்த வட்டி மற்றும் ப்ரோசசிங் ஃபீஸில் சலுகை ஆகியவற்றை கடன் பெறும் நபரால் பேரம் பேச இயலும்.
தவறான வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பிட்டீங்களா? அப்போ உடனே இதை செய்யுங்க