Business news in tamil: இந்தியாவின் பிரபல தனியார் வங்கியான 'ஆக்சிஸ் வங்கி' வாடிக்கையாளர்களின் குறைகளுக்கு உடனடி தீர்வு வழங்க, வாட்ஸ்அப் பேங்கிங் எனும் புதிய திட்டதை அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப் மூலம் உரையாடல் நடத்தி தங்கள் சேமிப்பு கணக்கை பற்றிய முழுவிபரங்களையும் தெரிந்துகொள்ளலாம்.
வாட்ஸ்அப் மூலம் உரையாடல் நடத்த வங்கி கணக்கோடு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் கண்டிப்பாக தேவை என ஆக்சிஸ் வங்கி தெரிவித்துள்ளது. இதில் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் கணக்கு இருப்பு, சமீபத்திய பரிவர்த்தனைகள், கிரெடிட் கார்டு விபரம், நிலையான மற்றும் தொடர்ச்சியான வைப்பு விவரங்கள் பற்றிய தகவல்களைப் பற்றிய உங்கள் எல்லா வினவல்களும் ஒரு கிளிக்கில் உள்ளன.
வாட்ஸ்அப் பேங்கிங் திட்டத்தை பயன்படுத்துவதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களின் சமீபத்திய வங்கி பரிவர்த்தனைகளை தெரிந்து கொள்ளலாம். அதோடு அருகிலுள்ள கிளை, ஏடிஎம் அல்லது வங்கியின் கடன் வழங்கும் மைய இருப்பிடம் போன்ற தகவல்களை வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் பெறலாம். மற்றும் வங்கிகளின் தயாரிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். 'எண்ட் டு எண்ட்' மறைகுறியாக்கப்பட்ட செய்தி சேனலைப் பயன்படுத்தி க்ரிடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் செயல்பாட்டை நிறுத்தலாம்.
/tamil-ie/media/media_files/uploads/2021/03/axis-bank-chart-190x300.jpg)
ஆக்சிஸ் வங்கியின் இந்த வாட்ஸ்அப் பேங்கிங் 24 × 7 (விடுமுறை நாட்களில் கூட) செயல்பாட்டில் இருக்கும். இந்த சேவை வங்கியின் வாடிக்கையாளர்களுக்கும், வங்கியின் வாடிக்கையாளர்கள் அல்லாதவர்களுக்கும் கிடைக்கும். "இந்த திட்டம் மிகவும் பாதுகாப்பானது. ஏனெனில் இது 'எண்ட் டு எண்ட்' குறியாக்க அடிப்படையில் செயல்படுகிறது" என்று ஆக்சிஸ் வங்கி தெரிவித்துள்ளது.
'மனதை திற' என்னும் தத்துவத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த திட்டம், வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுவதற்கும், அவர்களின் குறைகளை எளியமையான முறையில் நேரடியாக தெரிவிக்கவும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது குறித்து கருத்து தெரிவித்த ஆக்சிஸ் வங்கி மற்றும் டிஜிட்டல் வங்கியின் ஈ.வி.பி மற்றும் தலைவர் சமீர் ஷெட்டி, “டிஜிட்டல் வங்கி தொழில்நுட்பம் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எங்கள் வாடிக்கையாளர்களுக்கும், வாடிக்கையாளர்கள் அல்லாதவர்களுக்கும் தடையற்ற மற்றும் தனிப் பயனாக்கப்பட்ட அனுபவத்தை வழங்கும்’’ என்று தெரிவித்துள்ளர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil