business news In tamil : 2021-ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் முன்வைத்த பட்ஜெட் குறித்து தமிழகத்தின் உயர்மட்ட தொழிலதிபர்களுடன் அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். அதில் டிவிஎஸ் மோட்டார் தலைவர் வேணு சீனிவாசன், எம்ஆர்எஃப் லிமிடெட் தலைவர் எம் மம்மென், இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெட் துணைத் தலைவர் என்.சீனிவாசன், முன்னாள் அசோக் லேலண்ட் தலைவர் ஆர்.சேசாசாய் மற்றும் அப்பல்லோ மருத்துவமனைகளின் எம்.டி. சுனிதா ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்தாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு, தமிழகத்தின் முக்கிய தொழிலதிபர்களை நிதியமைச்சர் சந்தித்திருப்பது இதுவே முதல் முறை ஆகும். அதோடு இந்த சந்திப்பு எதைப் பற்றிய என்ற விரிவான தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. மற்றும் பட்ஜெட் குறித்த தொழிலதிபர்களின் கருத்தை சந்திப்பின் போது கேட்டுத் தெரிந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த பட்ஜெட் வளர்ச்சியைத் தூண்டும் விதமாக உள்ளது என்றும், இந்த காலண்டில், உற்பத்தி உட்பட அனைத்து தொழில்களும் முழு திறனை நோக்கி இயங்கும் என்றும் என்று இந்தியா சிமென்ட்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குனர் என்.சீனிவாசன் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்களை நிதியமைச்சரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிப்பட்டது.
இந்த சந்திப்பிற்கு முன்னதாக, தமிழ்நாடு பாஜக வர்த்தக பிரிவை சந்தித்து பேசியுள்ளார். அப்போது தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நிதியமைச்சரை வரவேற்கும் விதமாக கடவுள் முருகனின் வேலை பரிசாக அளித்துள்ளார். பின்னர் தமிழ்நாடு பாஜக வர்த்தக பிரிவினருடன் உரையாற்றியுள்ளார். இந்த உரையாடலின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், நிதியமைச்சரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil