வட்டியில்லாக் கடன்; வரிச் சலுகையும் உண்டு: SBI PPF தொடங்குவது எப்படி?

how to open Public Provident Fund (ppf) account Tamil News: எஸ்பிஐ வங்கியின் பிபிஎஃப் திட்டத்தின் கணக்கை வங்கி கிளையைப் பார்வையிடுவதன் மூலமோ அல்லது ஆன்லைன் முறை வழியாகவோ திறக்க முடியும்.

Business news in tamil how to open Public Provident Fund (ppf) account

Business news in tamil: பிபிஎஃப் என பெரும்பாலும் குறிப்பிடப்படும் ‘பொது வருங்கால வைப்பு நிதி’ என்பது மத்திய அரசால் நடத்தப்படும் ஒரு சிறிய சேமிப்பு திட்டம் (எஸ்எஸ்எஸ்) ஆகும். இது போன்ற 12 சிறு சேமிப்பு திட்டங்களில் மிகவும் பிரபலமான சேமிப்பு திட்டமாக, இந்த பிபிஎஃப் திட்டம் உள்ளது. இது உறுதிப்படுத்தப்பட்ட வருமானத்தை வழங்குவதோடு, பாதுகாப்பான முதலீட்டு கருவியாகவும் உள்ளது. இந்தத் திட்டம் குறித்து நீங்கள் அறிந்திருக்கவில்லை என்றால், இதோ உங்களுக்கு தேவையான மொத்த தகவல்களையும் இங்கு வழங்குகிறோம்.

பிபிஎஃப் திட்டம் மற்ற சிறுசேமிப்பு திட்டங்ககளை விட அதிக (7.1 சதவீதம்) வட்டி தரும் திட்டமாகும். இந்த திட்டத்திற்கு எந்தவொரு இந்திய குடிமகனும் தகுதியுடையவர் ஆகிறார். உங்களுக்கு அருகாமையில் உள்ள எந்த தபால் நிலையத்திலும் அல்லது வங்கியிலும் பிபிஎஃப் கணக்கைத் திறக்கலாம். மிகவும் பிரபலமான திட்டங்களில் ஒன்றாக உள்ள எஸ்பிஐயின் பிபிஎஃப் திட்டத்தின் கணக்கை வங்கி கிளையைப் பார்வையிடுவதன் மூலமோ அல்லது ஆன்லைன் முறை வழியாகவோ திறக்க முடியும்.

எஸ்பிஐ பிபிஎஃப் கணக்கை எவ்வாறு திறப்பது?

உங்கள் ஆதார் எண் உங்கள் வங்கிக் கணக்கில் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். வங்கியில் இருந்து ஒருமுறை கடவுச் சொல்லை (OTP) பெற, உங்கள் மொபைல் எண்ணையும் வங்கியில் பதிவு செய்ய வேண்டும்.

இப்போது உங்கள் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் மூலம் எஸ்பிஐ கணக்கில் உள்நுழையவும்.

பின்னர் ‘கோரிக்கை மற்றும் விசாரணைகள்’ தாவலைக் கிளிக் செய்யவும்.

கீழ்தோன்றும் மெனுவைக் காண்பீர்கள். அதில் ‘புதிய பிபிஎஃப் கணக்குகள்’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

இப்போது நீங்கள் ஒரு பிபிஎஃப் பக்கத்திற்கு அனுப்பப்படுவீர்கள். உங்கள் பான் (நிரந்தர கணக்கு எண்) எண் மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர் விவரங்களை நீங்கள் அதில் காண முடியும்.

அதில் உங்கள் பெயர் மற்றும் பிற விவரங்களை சரிபார்த்த பிறகு தொடரவும்.

சமர்ப்பித்த பிறகு நீங்கள் ஒரு உரையாடல் பெட்டியைக் காண்பீர்கள், இது நீங்கள் வெற்றிகரமாக சமர்ப்பித்ததாகச் சொல்லும். உங்களிடம் குறிப்பு எண்ணும் இருக்கும்.

குறிப்பு எண்ணைக் கொண்ட படிவத்தைப் பதிவிறக்கவும். படிவத்தை அச்சிட்டு, KYC முறைகளை 30 நாட்களுக்குள் முடிக்கவும்.

எஸ்பிஐ பிபிஎஃப் கணக்கு அம்சங்கள் மற்றும் நன்மைகள்

  1. ஒரு எஸ்பிஐ பிபிஎஃப் கணக்கை குறைந்தபட்சம் ரூ .500 உடன் திறக்க முடியும். அதே நேரத்தில் அதிகபட்ச ஆண்டு வரம்பு ரூ .1.5 லட்சம். முதிர்வு காலம் 15 ஆண்டுகள். இதை மேலும் 5 ஆண்டு காலத்திற்கு நீட்டிக்க முடியும். வட்டி விகிதத்தை இந்திய அரசு தீர்மானிக்கிறது. தற்போதைய பிபிஎஃப் கணக்கு வட்டி விகிதம் 7.10 சதவீதமாகும்.
  2. பிபிஎஃப் வட்டி ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 அன்று செலுத்தப்படுகிறது.
  3. உங்கள் பிபிஎஃப் பணத்தில் கடன் எடுக்கலாம். இது உங்களுக்கு வரி சலுகைகளையும் வழங்குகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” ( https://t.me/ietamil )

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Business news in tamil how to open public provident fund ppf account

Next Story
EPFO Tamil News: 75% பணம் எப்போது எடுக்கலாம்? ஆன்லைன் ஸ்டெப்ஸ் இங்கே!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com