/tamil-ie/media/media_files/uploads/2021/02/IPL-Auction-2021-Vivo-IPL-2021-Auction-Live-9.jpg)
business news in tamil New guidelines for PF account and online update for provident fund account holders
business news in tamil: வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) கணக்கு விவரங்களில் திருத்தம் செய்ய ஊழியர்களுக்கு உதவ, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (ஈபிஎஃப்ஓ) கடந்த காலங்களில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி பெயர், தந்தையின் பெயர், பிறந்த தேதி போன்றவற்றில் திருத்தம் செய்வதற்கான படிகள் ஈபிஎஃப்ஓ அமைப்பால் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இப்போது ஈபிஎஃப்ஓ ஒட்டுமொத்த செயல்பாட்டில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அந்த மாற்றங்களை சிறு மற்றும் பெரிய மாற்றங்கள் என இரண்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி திருத்தம் செய்வதற்கான செயல்முறை, புதிய வழிகாட்டுதல்களின்படி மேற்கொள்ளப்பட வேண்டும் என கூறியுள்ளது.
புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் என்னவென்றால், வைப்பு நிதி (பி.எஃப்) கணக்குகளில் இருந்து திரும்பப் பெறுவதற்கான சில மோசடிநிகழ்வுகளை ஈ.பி.எஃப்.ஓ கவனித்துள்ளது. உறுப்பினரின் சுயவிவரத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு(பெயர், தந்தை / கணவரின் பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினம் ஆகியவற்றில் உள்ள பிழைகளை சரிசெய்ய) ஈ.பி.எஃப்.ஓ அனுமதி அளித்திருந்தது.
இருப்பினும், சில சந்தர்ப்பங்களில் முழுமையான பெயர் மற்றும் சுயவிவர மாற்றம் செய்யப்படுவது, உறுப்பினரின் பெயரால் மோசடி செய்ய வழிவகுக்தது. எனவே உறுப்பினர் சுயவிவரத்தில் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் செயல்முறை மூலம் முழுமையான மாற்றத்தை கொண்டு வர அனுமதிக்க முடியாது என்று கூறியிருந்தது. அதன்படி முக்கிய சூழ்நிலைகளில் தவிர, சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட சரியான செயல்முறையைத் தொடர்ந்து உறுப்பினரின் பெயர் மாற்றப்படலாம். அல்லது உறுப்பினர் தரவை முதலாளியால் தவறாக பதிவேற்றியது, உறுப்பினர் மற்றும் முதலாளியால் ஆவண சான்றுகளை சமர்பிக்கப்பட்டபோது ஏற்பட்ட பிழைக்கு மற்றும் பெறலாம் என்று கூறியுள்ளது.
உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (கேஒய்சி) குறித்த திருத்தம் தொடர்பாக பின்வரும் வழிகாட்டுதல்கள் ஈ.பி.எஃப்.ஓ ஆல் வழங்கப்பட்டுள்ளன.
சிறிய திருத்தங்கள்:
1. பெயர் / குடும்பப்பெயரை சுருக்கத்திலிருந்து முழுப் பெயருக்கு விரிவாக்குவது போன்றவற்றை மேற்க்கொள்ளலாம். அல்லது அதற்கு நேர்மாறாக, திருத்தத்திற்குப் பிறகு, பெயரின் உச்சரிப்பு மாறாது, எனவே முதல் எழுத்தை மாற்றாமல் மாற்றிக் கொள்ளலாம்.
எ.கா: ஆர்.குமார் எனும் பெயரை ராகேஷ் குமார் எனவும். வி.எஸ். வர்மா எனும் பெயரை விஜய் சங்கர் வர்மா என்றும் சிறிய திருத்தம் மேற்கொள்ளலாம். ஆனால் ஆர்.குமார் என்பதை சுரேஷ்குமார் என்று திருத்தம் செய்ய இயலாது.
2. தந்தையின் பெயர் அல்லது கணவரின் பெயர் ஆதாரில் நடுத்தர பெயராக இருந்தால், அதை மாற்றிக் கொள்ளலாம்.
எ.கா. சுனிதா குமார் (க/பெ அல்லது த/பெரமேஷ் குமார்) என்பதை சுனிதா ரமேஷ் குமார் என்று மாற்றிக் கொள்ளலாம்.
3. திருமணத்திற்குப் பிறகு பெண் ஊழியர்களின் குடும்பப்பெயரில் மட்டுமே மாற்றம் இருந்தால், அதையும் மாற்றலாம்.
எ.கா. சுனிதா ஷர்மா என்பதை சுனிதா சிங் என்று மாற்றலாம்.
முக்கிய திருத்தங்கள்:
“சிறு திருத்தம்” என்ற பிரிவில் வராதவைகள், அல்லது பெயர் / தந்தை பெயரில் முழுமையான மாற்றத்தை கொண்டு வர விரும்புவர்கள்,
அல்லது இரண்டுக்கும் மேற்பட்டஇடங்களில் திருத்தம் வேண்டும்என்பவர்களுக்கு என்று இரண்டு வகை திருத்தங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது.
“மைனர்” மற்றும் “மேஜர்” திருத்தங்களை அங்கீகரிக்க தகுதியான அதிகாரம்:
a) சிறுதிருத்தங்களுக்கு: APFC / RPFC II
b) முக்கியதிருத்தங்களுக்கு: RPFC-I / RPFC-II (OIC)
மேலே விவரிக்கப்பட்டுள்ளபடி பெரிய திருத்தங்களை மேற்கொள்ள சரியான ஆவண சான்றுகளைப் பெறாமல் ஆன்லைன் செயல்பாட்டில் திருத்தம் செய்யப்பட மாட்டாது.முதலாளியிடமிருந்து பெறும் விளக்கச் சான்றிதழ் உட்படRPFC I / RPFC II (OIC) சிறு மற்றும் முக்கிய திருத்தம் பொருத்தமானதாகக் உள்ளதா என்பது பற்றிய உண்மையான தன்மையை சரிபார்க்கிறது.
மூடிய நிறுவனத்தின் முதலாளி அல்லது அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிட்டவர், கண்டுபிடிக்க முடியாத / கிடைக்காத நிலையில், கூட்டு அறிவிப்பு வழங்கும் அதிகாரம் பரிந்துரைக்கப்பட்ட அதிகாரிகளில் ஒருவர் பரிந்துரை செய்யலாம். மேலும் திருத்தம் உரிய கவனிப்பு மற்றும் எச்சரிக்கையுடன் செய்யப்பட வேண்டும். ஆவணப்படத்தின் சரியான சரிபார்ப்பிற்குப் பிறகுதான் அடையாளம், வேலைவாய்ப்பு போன்றவற்றின் சான்றுகளில் தயாரிக்கப்பட்ட சான்றுகள் சார்பார்க்கப்படும்.
கூட்டு அறிவிப்பு வழங்கும் முதலாளியால் கையெழுத்திடப்பட்டால், பணியாளர் பதிவு, அதிகரிப்பு ஆர்டர்கள், சம்பளம் வழங்கிய படிவம், நியமனம் உத்தரவு போன்றவையும், படிவம் -23 (பி.எஃப் ஸ்லிப்) இல் தவறான பெயரை சரிசெய்ய ஈ.பி.எஃப் அலுவலகத்திற்கு அளிக்கப்பட்டவிண்ணப்பமும், உங்களுடைய அசல் பதிவுகளை தயாரிக்குமாறு முதலாளியிடம் கேட்கப்பட வேண்டும்.
மூடிய நிறுவனத்தின், விண்ணப்பதாரர் நியமனக் கடிதம், சம்பளம் வழங்கிய படிவம், சம்பள அதிகரிப்பு உத்தரவு, பி.எஃப்-ஸ்லிப் போன்ற ஆதாரங்களை, படிவம் 23 இல் பெயரைச் சரிசெய்ய விண்ணப்பம் தயாரிக்கும் போது கேட்கப்படலாம்.
அதிகாரம் தேவை என நினைக்கும் பிற பதிவுகளும் கேட்கப்படலாம்.அவைதொழில் முனைவோர் அமைப்பு மூலம் சரிபார்ப்பு செய்யப்படலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.