Digital gold investment: நம்பத்தகுந்த ஒரு முதலீடு என்று நாம் யோசித்தால் நம் கண் முன்னே உடனே வருவது தங்கத்தில் முதலீடு செய்வது தான். பெரும்பாலான நபர்கள் தங்கத்தை நகையாக வாங்கி வைப்பது உண்டு. ஆனால் செய்கூலி, சேதாரம் போன்ற விஷயங்களை கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அதே போன்று மீண்டும் அதனை விற்பனைக்கு என்று வைக்கும் போது அதில் கிடைப்பது லாபமா நஷ்டமா என்பதையும் யோசிக்க வேண்டும்.
இது போன்ற காரணங்களையெல்லாம் கருத்தில் கொண்டு தான் தற்போது இளைய தலைமுறையினர் பலரும் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது குறித்து அதிகம் யோசனை செய்து வருகின்றனர். இது அபாயங்கள் குறைவாக இருக்கும் டிஜிட்டல் முதலீட்டு அம்சமாகும். சந்தை அபாயங்களை கொண்டுள்ள முதலீட்டு திட்டங்களுக்கு மத்தியில் தங்கம் என்பது பாதுகாப்பான ஒன்றாக இருந்தது. ஆனாலும் அதனை பத்திரப்படுத்தி வைக்க வேண்டும் என்பது மிகப்பெரிய சவாலான காரியமும் கூட.
பாதுகாப்பான சேமிப்பு
டிஜிட்டல் தங்க முதலீட்டில் இது ஒரு பாதுகாப்பான அம்சமாகும். பாதுகாப்பதில் பிரச்சனையற்ற வழிமுறைகளை வழங்குகிறது டிஜிட்டல் தங்க முதலீடு. அதே நேரத்தில் முதலீட்டிற்கு ஏற்ற ரிட்டர்ன்ஸையும் வழங்குகிறது.
எளிமையான முதலீடு
வெறும் ஒரு ரூபாயை கொண்டு 24 கேரட் டிஜிட்டல் தங்கத்தில் நீங்கள் முதலீடு செய்யலாம். பிறகு உங்களின் விருப்பம் போல் நீங்கள் பணத்தை தங்கத்தில் முதலீடு செய்ய இயலும். மலிவு தன்மை மற்றும் நெகிழ்ச்சி இந்த முதலீட்டை அனைவரும் விரும்பும் ஒன்றாக மாற்றுகிறது.
தற்போது தான் முதலீடு செய்ய ஆரம்பிக்கிறீர்கள் என்றால் வலுவான நீண்ட கால முதலீட்டு போர்ட்ஃபோலியோவை உருவாக்க டிஜிட்டல் தங்கம் சிறந்த தேர்வாக இருக்கும். மிக சிறிய அளவில் முதலீடு செய்ய இது உங்களை அனுமதிக்கும். உச்ச வரம்பு ஏதும் இல்லை. இது முழுக்க முழுக்க தொழில்நுட்பம் சார்ந்த பாதுகாப்பான முதலீடாகும். எனவே தங்கத்தின் சேமிப்பு மற்றும் ஆன்லைன் வாலட்கள் குறித்து கவலைப்பட வேண்டாம்.
நிலையான பரிவர்த்தனை விகிதங்கள்
டிஜிட்டல் தங்கமானது, சர்வதேச பரிவர்த்தனை சந்தை விலையில் உங்கள் வசதிக்கேற்ப வாங்கி விற்கும் வசதியோடு வருவதால் உள்நாட்டு காரணிகளால் உங்களின் தங்க மதிப்பு பாதிக்கப்படுவதில்லை.
பரிவர்த்தனைகளில் வெளிப்படை தன்மை இருப்பதோடு, தங்கத்தை நேரடியாக வாங்கவும், பணமாக மாற்றவும், ஆன்லைனில் வாங்கவும் முடியும். கூடுதலாக டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்ய லாக்-இன் காலம் ஏதும் இல்லை. 24 மணி நேரமும் நீங்கள் தங்கத்தை வாங்கி விற்பனை செய்ய இயலும். தங்கத்தை நகைகளாக வாங்கும் போது வசூலிக்கபடும் மறைமுக கட்டணங்கள் ஏதும் இதில் இல்லை.
மேலும் உங்கள் டிஜிட்டல் தங்கம் வாங்குவதில் உங்களுக்கு உதவுவதுடன், பாதுகாப்பான பெட்டகத்தில் ஆன்லைனில் 24K தங்கத்தை வாங்குதல், விற்பனை செய்தல், பரிசளித்தல், மீட்டுக்கொள்ளுதல் மற்றும் வைத்திருக்கும் விருப்பத்தை வழங்குகிறது MyGoldKart தளம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil