சந்தை அபாயங்கள் இல்லாத தேசிய சேமிப்பு திட்டம்; முழுமையான விவரம் இங்கே!

அருகில் உள்ள தபால் நிலையங்களில் இந்த சேமிப்பு கணக்கை நீங்கள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ திறக்க இயலும்

Savings Schemes National Savings Certificate : கஷ்டப்பட்டு உழைத்து சேமித்த பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்வதை தான் நாம் அனைவரும் விரும்புவோம். சந்தை அபாயங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். பாதுகாப்பாக இருக்க வேண்டும். ரிட்டர்ன்ஸின் போது நமக்கு பெரிய வகையில் உதவிகரமாக இருக்க வேண்டும். இப்படியான தேவைகள் அடிப்படையில் நீங்கள் ஒரு சிறந்த சேமிப்பு திட்டத்தை தேடிக் கொண்டிருந்தால் இந்த செய்தி உங்களுக்காக தான்.

National Savings Certificate

தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் மிகவும் பிரபலமான சேமிப்பு திட்டம் National Savings Certificate எனப்படும் தேசிய சேமிப்பு சான்றிதழ். சிறு வருமான முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

அருகில் உள்ள தபால் நிலையங்களில் இந்த சேமிப்பு கணக்கை நீங்கள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ திறக்க இயலும். மைனர்களுக்கும் இந்த கணக்கை பயன்படுத்தலாம். மேலும் ஐந்து ஆண்டுகளுக்கான ஃபிக்ஸ்ட் மெச்சூரிட்டி காலத்துடன் இந்த சேமிப்பு திட்டம் வருகிறது. ஆண்டுக்கு 6.8% வட்டி வழங்கக் கூடிய இந்த சேமிப்பு கணக்கில் முதலீட்டின் உச்சவரம்பு என்று ஒன்று இல்லை. அதே சமயத்தில் ரூ. 1.5 லட்சம் வரையிலான முதலீட்டிற்கு வட்டியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Hindu Undivided Families குடும்ப உறுப்பினர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்த கணக்கை துவங்க இயலாது.

NSC சேமிப்பு திட்டத்தின் சிறப்பம்சங்களும் பயன்களும்

நிலையான வருமானம் : இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு நிலையான 6.8% வட்டி வழங்கப்படும். வங்கிகள் மற்றும் இதர வங்கி சேவைகளில் நிலையான வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டியை காட்டிலும் இது அதிகமானது.

வகைகள் : NSC VIII Issue மற்றும் NSC IX Issue என ஆரம்பத்தில் இரண்டு வகையான சேமிப்பு சேவைகள் வழங்கப்பட்டன. 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் NSC IX திட்டம் ரத்து செய்யப்பட்டது. தற்போது NSC VIII Issue மட்டுமே செயல்பாட்டில் உள்ளது.

வரி சேமிப்பு : அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் வரி சேமிப்பு திட்டமாக, வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80 சி-ன் கீழ் ரூ .1.5 லட்சம் வரை வரி விலக்கு உண்டு.

முதலீடு : நீங்கள் வெறும் ரூ. 1000-த்தில் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

கணக்கு துவங்குவது எப்படி? : இந்த திட்டத்தை நீங்கள் அருகில் இருக்கும் தபால் நிலையத்தில், அவர்கள் கேட்கும் ஆவணங்களை சமர்பித்து கணக்கு துவங்கலாம். மேலும் உங்களின் இந்த சேமிப்பு திட்டத்தில் உள்ள பணத்தை ஒரு தபால் நிலையத்தில் இருந்து மற்றொரு தபால் நிலையத்திற்கு எளிமையாக மாற்றவும் முடியும்.

Premature Withdrawal : பொதுவாக, ஒருவர் திட்டத்தின் ஆரம்பத்திலேயே அதில் இருந்து வெளியேற முடியாது. இருப்பினும், ஒரு முதலீட்டாளரின் மரணம் அல்லது நீதிமன்ற உத்தரவு இருந்தால் பணத்தை இடையிலேயே திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Business news tamil savings schemes national savings certificate

Next Story
வீட்டுக் கடன் வாங்கியே ஆகணுமா? இந்த 5 விஷயங்களை கவனியுங்க!Home loan, house loan, EMI, business news, tamil news, Business news in Tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X