business tamil news sbi online sbi online balance: பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) SBI Quick — Missed Call Banking என்ற சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
Advertisment
இதன் மூலம் எஸ்பிஐ சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர் அல்லது வேறு வகையான கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு மிஸ்ட் கால் மூலம் தங்களது வங்கி கணக்கில் உள்ள இருப்பு தொகையை சரிபார்த்துக் கொள்ளலாம். எஸ்பிஐ யின் balance inquiry number 09223766666 மூலம் எஸ்பிஐ வங்கி கணக்கு வைத்திருப்பவர் mini statement மற்றும் கணக்கு தொடர்பான இதர விவரங்களையும் அறிந்துக் கொள்ளலாம். எனினும் எஸ்பிஐ யில் இந்த SBI Quick — Missed Call Banking சேவையை பயன்படுத்த எஸ்பிஐ யில் கணக்கு வைத்திருப்பவர் தங்களது பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணை மட்டுமே பயன்படுத்த முடியும்.
SBI Quick — Missed Call Banking சேவையை பயன்படுத்த எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் SBI Quick ஆப்பை யும் தங்களது Blackberry, iOS அல்லது ஆண்ட்ராய்டு கைபேசிகளில் பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும். இந்த ஆப் சம்பந்தப்பட்ட ஆப் ஸ்டோர்களில் கிடைக்கும். பதிவிறக்கம் செய்த பிறகு உள்ளீடு செய்யும் செயல்முறையை (login procedure) முடித்துக் கொள்ள வேண்டும். SBI Quick ஆப்பில் உள்ள வசதிகளை பயன்படுத்த இணையதள சேவை தேவை இல்லை. ஏனேன்றால் அனைத்து விவரங்களையும் ஒரு மிஸ்டு கால் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
SBI Quick ஆப்பை பதிவிறக்கம் செய்த பிறகு எஸ்பிஐ யின் Missed Call Banking சேவையை பெற ஒருவர் ஒரு முறை பதிவு செய்ய வேண்டும். இது இயற்கையிலேயே மிகவும் எளிதானது. SBI Quick ஆப்பில் எப்படி ஒரு முறை பதிவு செய்ய வேண்டும் என்பதை பார்கலாம்.
09223488888 என்ற எண்ணுக்கு உங்களது பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிலிருந்து ஒரு குறுஞ்செய்தியை அனுப்புங்கள். அதற்கான format ‘REG Account Number’
அடுத்து உங்கள் பதிவு செய்யும் செயல்முறை வெற்றிபெற்றதா அல்லது தோல்வியடைந்ததா என்பது குறித்து ஒரு குறுஞ்செய்தி கைபேசி எண்ணுக்கு வரும். வெற்றி என்றால் நீங்கள் SBI Quick Missed Call Banking சேவையை பயன்படுத்த துவங்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.