பங்குகள் விலை உயர்வு; தங்கம் விலை சரிவு: எதில் முதலீடு செய்வது லாபம்?

Best investment options tamil news: ஒருபுறம் பங்குகளின் விலை உயர்கிறது, மறுபுறம் தங்கத்தின் விலை சரிகிறது. இந்த நேரத்தில் எதில் முதலீடு செய்யதால் அதிக லாபம் ஈட்டலாம் என்பது பற்றி இங்கு காணலாம்.

Business tamil news Stock Vs Gold: which is best investment options now?

Stock Vs Gold; best investment options tamil news: கடந்த சில மாதங்களாக, பங்குச் சந்தைகளின் புள்ளிகள் அதிகரித்து வருகின்றன. கடந்த வாரத்தில் 50,000 இருந்த புள்ளிகள் தற்போது 52,000 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து, எப்போதும் இல்லாத உயர் மட்டத்தைத் தொடும் அளவிற்கு உள்ளன. ஒருபுறம் பங்குகளின் விலை உயரவதால் மறுபுறம் தங்கத்தின் மதிப்பு குறைந்து வருகிறது. 57,000 ரூபாய்க்கு விற்ற 10 கிராம் தங்கம் தற்போது ரூ .46,000 ஆக குறைந்துள்ளது.

சில முதலீட்டாளர்கள் பங்குகளின் விலை நிலையானது அல்ல என்பதால், தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்று நினைக்கிறார்கள். அதோடு பங்குச் சந்தைகளின் விலை வீழ்ச்சியடைந்தால் தங்கத்தின் மதிப்பு கூடும் என்றும் யூகிக்கிறார்கள். எனவே அவர்கள் தங்க பரிவர்த்தனை வர்த்தக நிதி (ப.ப.வ.நிதி) போன்றவற்றில் முதலீடு செய்யலாம் என்றும் திட்டமிட்டுகிறார்கள்.

பங்குகள் மற்றும் தங்கத்தின் முதலீடுகள் குறித்து சந்தை வல்லுநர்கள் பரிந்துரைப்பது என்ன?

இது குறித்து பிஎஸ்இயின் முன்னாள் தலைவரும் ரவி ராஜன் அண்ட் கோ நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரருமான எஸ்.ரவி கூறுகையில், “தங்கம் மற்றும் பங்குகள் வெவ்வேறு வகையான முதலீட்டு சொத்துக்கள். தற்போது பங்குகளின் விலைகள் அதிகமாக உள்ளன. எனவே முதலீட்டாளர்கள் விவேகத்துடன் இருக்க வேண்டும், மற்றும் பங்குகளை கவனமாக வாங்க வேண்டும். இந்த மிதமான சந்தையில் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டக்கூடாது .

மேலும் தங்கத்தின் விலை ஒருபுறம் வீழ்ச்சியடைகிறது. ஆனால் ஒருவர் அதைப் பற்றி அவநம்பிக்கையுடன் இருக்க வேண்டியதில்லை. வரலாற்று ரீதியாக இந்த வகை சொத்து, ஆண்டு அடிப்படையில் நல்ல வருமானத்தை அளித்து வருகிறது.

ஒரு விவேகமான முதலீட்டாளர் அனைத்து வகை சொத்துக்களிலும் பன்முகப்படுத்தப்பட்ட முதலீட்டை விரும்புகிறார். பல்வகைப்படுத்தப்பட்ட போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களுக்கு, ஒவ்வொரு வகை சொத்துக்களுடன் தொடர்புடைய அபாயங்களைத் தணிக்க உதவுகிறது” என்று ரவி கூறினார்.

சொத்து ஒதுக்கீட்டின் அவசியத்தை வலியுறுத்தி கூறியுள்ள, ஈக்விட்டி மாஸ்டர் மற்றும் நடத்தை தொழில்நுட்ப பகுப்பாய்வு ஆராய்ச்சித் தலைவர் விஜய் எல் பாம்ப்வானி, “விவேகமான முதலீட்டாளர்கள் சொத்து ஒதுக்கீட்டை நாட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். எந்தவொரு முதலீட்டாளரும் 100 சதவீத பங்குகளில் முதலீடு செய்யக்கூடாது. குறைந்தது 20 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட சதவீகிதம் தங்கத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். நிதிச் சந்தைகள் எப்போதும் சிக்கலானவை. ஆனால் தங்கத்தின் விலை எப்போது வேண்டுமானாலும் உயரலாம்” என்று கூறியுள்ளார்.

சொத்து ஒதுக்கீட்டின் ஒரு பகுதியாக தங்கத்தில் முதலீடு செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் மைவெல்த் க்ரோத்.காமின் இணை நிறுவனர் ஹர்ஷத் சேதன்வாலா கூறுகையில், “இந்த ஆலோசனை பொதுவானதாக தோன்றலாம், ஆனால் அது நடைமுறைக்குரியது. சந்தை சுழற்சிகளில் சொத்து ஒதுக்கீட்டை எப்போதும் பின்பற்ற வேண்டும். ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பு இது போன்ற தலைகீழ் போக்கு இருந்தது.

அப்போது பங்குகள் சரிந்தும், தங்கத்தின் மதிப்பு உயர்ந்தும் காணப்பட்டது. சந்தைகள் எல்லா நேரத்திலும் உயர்ந்த நிலையில் இருந்தாலும், நீண்ட காலத்திற்கு பங்குகளில் தொடர்ந்து முதலீடு செய்வதற்கான வாய்ப்பு இன்னும் உள்ளது. எங்கள் முதலீட்டாளர்கள் தங்கள் நீண்ட கால பங்கு முதலீட்டைத் தக்க வைத்துக் கொள்ளுமாறு நாங்கள் தொடர்ந்து பரிந்துரைக்கிறோம். தற்போது நிதி தேவையில்லை என்றால் வெளியேற வேண்டாம் என்றும் கூறியுள்ளோம்.

ஒரு புதிய பங்கு முதலீட்டு கண்ணோட்டத்தில், முதலீட்டாளர்கள் தங்களது பணத்தில் 25-30 சதவீதத்தை தற்போது முதலீடு செய்வதைப் பார்க்க முடிகிறது. மீண்டும் அந்த சதவிகிதத்தை 3 முதல் 4 மாதங்களுக்கு மேல் படிப்படியாக உயர்த்தி முதலீடு செய்யலாம்.

தங்கத்தைப் பொறுத்தவரை, அதை சொத்து ஒதுக்கீடு கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். உலகப் பொருளாதாரம் மற்றும் பங்குச் சந்தைகள் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டால், முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதற்கான தங்கள் திட்டங்களைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பலாம்” என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Business tamil news stock vs gold which is best investment options now

Next Story
எஸ்பிஐ தங்கப் பத்திரம் எப்பவும் பெஸ்ட் முதலீடு: ஆன்லைனில் எப்படி வாங்குவது?Business news in tamil How To Buy SBI’s Sovereign Gold Bonds via Online
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express