Advertisment

1 லட்சம் முதலீடு.. மாதந்தோறும் ரூ. 6000 கையில்! ஸ்பைஸ் இந்தியா முதலீடு பற்றி தெரியுமா?

ஒப்பந்தம் முடிந்த பின் ஒரு லட்சம் ரூபாய் பணம் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
money investment ideas tamil money investment tips

bussiness in tamil news money investment : இன்றைய சூழலில் பணத்திற்கு தரும் மதிப்பு மனிதர்களுக்கு தருவதில்லை. எப்படியாவது பணக்காரன் ஆகிவிட வேண்டும். எப்படியாவது லட்டம் லட்சமாக சம்பாதித்து வீடு, கார், பங்களா என செட்டில் ஆகி விட வேண்டும் என்பது தான் பலரின் கனவும். இந்த பணத்திற்காக தான் இவ்வளவும்.

Advertisment

அப்படிப்பட்ட பணத்தை சிலர் கடினமாக உழைத்து சம்பாதிப்பார்கள். சிலர் எளிமையாக சம்பாதிப்பார்கள். எப்படி சம்பாதித்தாலும் சரி பணத்தை சேர்க்க வேண்டும் என்றால் முதலில் பணத்தை சேமிக்கும் பழக்கம் வேண்டும். சேமிப்பு இருந்தால் மட்டுமே பணம் கையில் தங்கும். எவ்வளவு தான் சேமித்தாலும் எதிர்ப்பாராத செலவு வந்து விடுகிறது என்று புலம்புவர்களில் ஒருவரா நீங்கள்? இதோ உங்களுக்கு தான் இந்த செய்தித்தொகுப்பு.

வீட்டில் இருக்கும் தங்கத்தை வங்கியில் வைத்து பாதுகாத்தால் வட்டி கிடைக்கும்! தெரியுமா?

பணத்தை மிகச்சிறந்த முறையில் முதலீடு செய்யும் முறை. ஸ்பைஸ் இந்தியா நிறுவனம் பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். கடந்த 8 ஆண்டுகளாக சிறந்த முதலீடுகள் ஸ்பைஸ் இந்தியாவில் இருந்து வந்தவையே ஆகும். இந்த நிறுவனத்தில் 1 லட்சம் மட்டுமே நீங்கள் முதலீடு செய்தால் மாதந்தோறும் 6,000 பெறலாம். இதன் மூலம் 12 மாதங்களுக்கும் ஒப்பந்தப்படி மாதந்தோறும் 6000 ரூபாய் வீதம் அளிக்கப்படும். பின்னர், ஒப்பந்தம் முடிந்த பின் ஒரு லட்சம் ரூபாய் பணம் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

நீங்கள் முதலீடு செய்யும் பணம் தேயிலை வியாபாரம், ஆன்லைன் சேல், போன்ற பல தொழில்களில் பிரித்து முதலீடு செய்யப்படும். பின்பு அதில் வரும் லாபத்தில் இருந்து உங்களுக்கு மாதந்தோறும் ரூ. 6000 வழங்கப்படும். நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த முதலீடுகள் செய்யப்பட்டு வருகின்றன. உங்களுக்கு விருப்பம் இருந்தாலும் நீங்கள் தெளிவான ,விரிவான தகவல்களை பெற்றுக் கொண்டு இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து லாபத்தை மேலும் பெருக்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment