bussiness news in tamil : பங்கு சந்தையில் அரசு ஊழியர்களால் முதலீடு செய்ய முடியுமா? முடியாதா? ஆண்டாண்டு காலமாக இந்த கேள்வி எழும்பாமல் இல்லை. காரணம், அரசு ஊழியர்கள் முதலீடு செய்வதில் அரசு பல வகையான நடைமுறைகளையும் வைத்துள்ளது. அரசு வகுத்திற்கும் விதிமுறைகள் படி மட்டுமே ஊழியர்கள் ஷேர் மார்க்கெட் பற்றி சிந்திக்கவே முடியும்.
Advertisment
அரசு ஊழியர்கள் முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டியது எஸ்.ஐ.பி திட்டங்கள் குறித்து தான்.
1. நீங்கள் மத்திய அரசு அல்லது மாநில அரசு ஊழியராக இருந்தால் முதலில் ஸ்டாண்டிங் ஆர்டர்ஸ் விதிகளை பற்றி முழுமையாக படியுங்கள்.
2. அதே போல் நீங்கள் பணிபுரியும் நிறுவனம் அளித்துள்ள சர்வீஸ் ரூல்ஸ் ரொம்ப முக்கியம்.அதையும் முழுமையாக வாசித்துவிடுங்கள்.
3.'சிசிஎஸ் ருல்ஸ் சொல்வது என்னவென்றால், அரசு ஊழியர்கள் ஷேர்மார்க்கெட்டில் பங்குகளை வாங்குவதலோ அல்லது விற்றலோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வங்கிகளில் மியூட்சல் ஃபண்டுகளில் இன்வெஸ்மட் செய்ய அனுமதிக்கபடுவார்கள்.
4. அரசு ஊழியர்களின் வங்கி கணக்குள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். அவர்கள் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல், எந்தவித முதலீடு செய்தாலும் அதை முறைப்படி தெரிவிக்க வேண்டும். அதே நேரம் ஊழியர்கள் எஸ்.ஐ.பியில் போட அனுமதி வழங்கப்படுகிறது.
5. இந்த சிசிஎஸ் ரூல்ஸ் அல்லது ஸ்டாண்டி ஆர்டர்ஸ் விதிகளின் கீழ் வராத மத்திய அரசு ஊழியர்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்யலாம்.