நீங்கள் விரைவில் வீடு வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? எல்ஐசி ஹோம் லோன் வீட்டுக் கடனுக்கு ஆண்டுக்கு 6.90% முதல் வட்டி விதிக்கப்படுகிறது.கடன் வாங்கும் நபருக்கு ஏற்ப பல்வேறு கடன் திட்டங்களை எல்ஐசி வழங்குகிறது.
ஆன்லைன் வீட்டுக் கடன் அனுமதி வசதி, எளிய ஆவணங்கள், அதிகபட்சம் 30 ஆண்டுகள் அல்லது 60 வயதை எட்டுவது எதுவாக இருந்தாலும், முன்கூட்டியே செலுத்தினால் அபராதம் கிடையாது, ஏற்கனவே உள்ள வீட்டுக் கடன்களின் இருப்பு பரிமாற்றம் போன்ற பல நன்மைகளை எல்.ஐ.சி வழங்குகிறது
CIBIL ஸ்கோரை பொறுத்து ரூ.50 லட்சம் வரை வீட்டுக் கடன் வாங்கும் சம்பளதாரர்கள் மற்றும் தொழில்புரிவோருக்கு ஆண்டு வட்டி விகிதம் 6.90 % முதல் 7.50% வரை விதிக்கப்படுகிறது.
CIBIL ஸ்கோரை பொறுத்து ரூ.50 லட்சம் வரை வீட்டுக் கடன் வாங்கும் சம்பளம் பெறாத மற்றும் தொழில் புரியாதோருக்கு ஆண்டுக்கு 7.00 % லிருந்து 7.60 % வட்டி விதிக்கப்படுகிறது.
ரூ,50 லட்சத்திற்கு மேல் ரூ.1 கோடிக்குள் கடன் வாங்கும் சம்பளதாரர்கள் மற்றும் தொழில்புரிவோருக்கு ஆண்டு வட்டி விகிதம் 6.90 % முதல் 7.70 % வரை விதிக்கப்படுகிறது. இதுவும் CIBIL ஸ்கோரை பொறுத்தது.
சம்பளம் பெறாத மற்றும் தொழில் புரியாதோர் வாங்கும் ரூ.50 லட்சம் முதல் ரூ.1கோடி வரையிலான கடன்களுக்கு 7.00% லிருந்து 7.80 % வட்டி விதிக்கப்படுகிறது. இதுவும் CIBIL ஸ்கோரை பொறுத்தது.
ரூ .1 கோடி முதல் 3 கோடி வரையிலான வீட்டுக் கடனுக்கு, சம்பளம் மற்றும் தொழில் புரிவோருக்கு சிபில் ஸ்கோரை பொறுத்து 6.90% முதல் 7.70 % வரை வட்டி விதிக்கப்படுகிறது.
சிபில் ஸ்கோரை பொறுத்து சம்பளம் பெறாத மற்றும் தொழில்புரிவோர் அல்லாதவர்கள் வாங்கும் ரூ.1 கோடி முதல் ரூ.3 கோடி வரையிலான வீட்டுக் கடன்களுக்கு 7.00% முதல் 7.80 % வட்டி விதிக்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"