இன்று அமைச்சரவைக் கூட்டம்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை கடுமையாக போராடி வரும் தொலைத்தொடர்புத் துறைக்கு நிவாரணத் தொகுப்பின் ஒரு பகுதியாக தொலைத்தொடர்பு நிறுவனங்களால் ஸ்பெக்ட்ரத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணத்திற்கு, நான்கு வருட கால அவகாசத்திற்கு ஒப்புதல் அளித்தது என்று தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்னா அறிவித்தார். மேலும், இந்தத் துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை (FDI) அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளது என்றும் கூறினார்.
இந்த நடவடிக்கை, தற்போது வரை ஆயிரக்கணக்கான கோடிக்கு மேல் நிலுவைத் தொகைகளைக் கொண்டுள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களான வோடபோன் ஐடியா மற்றும் பாரதி ஏர்டெல் ஆகியவற்றுக்கு நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கோடீஸ்வரர் குமார் மங்கலம் பிர்லா ஆகஸ்ட் 4 அன்று வோடபோன் ஐடியா (வி) தலைவர் பதவியை ராஜினாமா செய்த சில வாரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வருகிறது.
தொலைத்தொடர்புத் துறைக்காக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பேசிய அமைச்சர் அஷ்வினி வைஷ்னா, சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயின் (ஏஜிஆர்) வரையறையை பகுத்தறிவு செய்ய அரசு முடிவு செய்ததாக கூறினார். ஏஜிஆரின் கீழ் தொலைத்தொடர்பு அல்லாத வருவாய் நீக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கொரோனா தொற்றுநோயின் போது திடீரென அதிகரித்த தொலைத்தொடர்பு போக்குவரத்து சமயத்தில் பங்களித்த தொலைத்தொடர்புத் துறை ஊழியர்களைப் பாராட்டிய அமைச்சர் அஷ்வினி வைஷ்னா, இந்த துறையில் ஒன்பது கட்டமைப்பு சீர்திருத்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக தெரிவித்தார்.
தானியங்கி வழி மூலம் பாதுகாப்புகளுடன் தொலைத்தொடர்பு துறையில் 100 சதவீத அன்னிய முதலீட்டை அமைச்சரவை அனுமதித்துள்ளதாக தொலைத்தொடர்பு அமைச்சர் அறிவித்தார்.
இந்த நடவடிக்கைகள் தொலைத்தொடர்பு துறையில் சில நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பணப்புழக்க சிக்கல்களை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அமைச்சர் கூறினார்.
26,058 கோடி மதிப்புள்ள ஆட்டோமொபைல் மற்றும் ட்ரோன் துறைக்கான பிஎல்ஐ திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
கூடுதலாக, ஆட்டோமொபைல் துறைக்கான திருத்தப்பட்ட உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார். கடந்த ஆண்டு நவம்பரில் அறிவிக்கப்பட்ட ரூ .57,042 கோடியிலிருந்து இந்த பிஎல்ஐ திட்டத்திற்கான செலவை ரூ .25,929 கோடியாக அரசாங்கம் குறைத்துள்ளது.
அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பிறகு ஊடகங்களுக்கு விளக்கம் அளித்த அமைச்சர் அனுராக் தாக்கூர், ஆட்டோமொபைல், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் மற்றும் ட்ரோன் தொழில்களுக்கான பிஎல்ஐ திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவித்தார். இதன் மூலம் ரூ .26,058 கோடி ஒதுக்கீடு செய்யப்படும், அதில் ஆட்டோமொபைல் துறைக்கு ரூ .25,929 கோடியும், ட்ரோன் தொழிலுக்கு ரூ .120 கோடியும் இருக்கும்.
ஆட்டோமொபைல் துறையில் எடுக்கப்பட்ட முடிவுகளைப் பற்றி பேசுகையில், அனுராக் தாக்கூர் ரூ. 26,058 கோடி மதிப்புள்ள ஊக்கத்தொகை ஐந்து வருடங்களுக்கு தொழில்துறைக்கு வழங்கப்படும் மேலும் ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ உதிரிபாகங்கள் தொழிலுக்கான பிஎல்ஐ திட்டம் ரூ. 42,500 கோடிக்கு மேல் புதிய முதலீடு, ரூ .2.3 லட்சம் கோடிக்கு மேல் உற்பத்தி மற்றும் 7.5 லட்சத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும், இது அடுத்த ஐந்து வருட காலத்தில் நடக்கும் என அரசாங்கம் மதிப்பிடுகிறது என்று கூறினார்.
1.97 லட்சம் கோடி ரூபாய் செலவில் ஆட்டோமொபல் மற்றும் ட்ரோன் தொழில்களுக்கான பிஎல்ஐ திட்டம், 2021-22 பட்ஜெட்டின் போது 13 துறைகளுக்கான பிஎல்ஐ திட்டங்களின் ஒட்டுமொத்த அறிவிப்பின் ஒரு பகுதியாகும்.
ஆட்டோமொபைல் துறைக்கான இந்த திட்டம் தற்போதுள்ள வணிகங்கள் மற்றும் தற்போது வாகன வணிகத்தில் இல்லாத புதிய முதலீட்டாளர்களுக்கு திறந்திருக்கும். இது இரண்டு கூறுகளைக் கொண்டுள்ளது. ஒன்று சாம்பியன் OEM ஊக்கத் திட்டம் மற்றொன்று கூறு (காம்போனெண்ட்) சாம்பியன் ஊக்கத் திட்டம்.
சாம்பியன் ஓஇஎம் ஊக்கத் திட்டம் ஒரு 'விற்பனை மதிப்பு இணைக்கப்பட்ட' திட்டமாகும், இது பேட்டரி மின்சார வாகனங்கள் மற்றும் ஹைட்ரஜன் எரிபொருள் செல் வாகனங்களின் அனைத்து பிரிவுகளுக்கும் பொருந்தும் என்று அமைச்சர் தாக்கூர் கூறினார்.
காம்போனென்ட் சாம்பியன் இன்சென்டிவ் திட்டம் என்பது ஒரு 'விற்பனை மதிப்பு இணைக்கப்பட்ட' திட்டமாகும், முழுமையாக நாக் டவுன் (சி.கே.டி)/ அரை நாக் டவுன் (SKD) கிட்கள், 2 சக்கர வாகனங்கள், 3 சக்கரங்கள், பயணிகள் வாகனங்கள், வணிக வாகனங்கள் மற்றும் டிராக்டர்கள் போன்ற வாகனங்களின் மேம்பட்ட ஆட்டோமோட்டிவ் தொழில்நுட்பக் கூறுகளுக்கானது.
கூடுதலாக, ட்ரோன்கள் மற்றும் ட்ரோன் பாகங்கள் தொழிலுக்கான PLI திட்டம் இந்த புரட்சிகர தொழில்நுட்பத்தின் வியூகங்கள், தந்திரங்கள் மற்றும் செயல்பாட்டு பயன்பாடுகளைக் குறிக்கிறது.
ட்ரோன்களுக்கான தயாரிப்பு சார்ந்த PLI திட்டம் ஆனது தெளிவான வருவாய் இலக்குகள் மற்றும் உள்நாட்டு மதிப்பு கூட்டலில் கவனம் செலுத்தும். மேலும், திறனை வளர்ப்பதற்கும் இந்தியாவின் வளர்ச்சி வியூகத்தின் முக்கிய உந்துசக்திகளை உருவாக்குவதற்கும் இந்த திட்டம் முக்கியமாகும்.
இந்த திட்டம் மூன்று வருட காலப்பகுதியில், 5,000 கோடி ரூபாய் முதலீடுகள், 1,500 கோடி ரூபாய் தகுதிவாய்ந்த விற்பனை அதிகரிப்பு மற்றும் சுமார் 10,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.