நிதித்துறையில் பெரிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று நாடாளுமன்றத்தில் 2021-22ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து ஆறு வாரங்கள் முடிவடைவதற்குள், காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டு வரம்பை 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக அதிகரிக்கும் வகையில் காப்பீட்டுச் சட்டம் 1938-ல் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
பாராளுமன்றத்தின் தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரில் சட்டத் திருத்தத்திற்கான மசோதா அறிமுகப்படுத்தப்படலாம் என்று அரசு வட்டாரங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் தெரிவித்தன. காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டு வரம்பை உயர்த்துவது மூலம் நிதிமூலதன உருவாக்கலை மேம்படுத்துவதோடு, மிகுந்த போட்டி வாய்ந்த துறையாக மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்நிய முதலீட்டு வரம்பை உயர்த்துவதன் மூலம், தேசத்தின் நீண்ட கால மூலதனச் சொத்துகளை உருவாக்குவதற்கான நீடித்த நிதியை பெறுவதற்கான ஒரு வாய்ப்பாகவும், நோய்த் தொற்றுக்குப் பிந்தைய காலங்களில் இந்திய பொருளாதார மீட்சிக்கு உதவும் என்று கூறப்படுகிறது.
காப்பீட்டுத் துறையில், அந்நிய முதலீட்டு வரம்பை 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக அதிகரித்து, புதிய உத்தேச வரையறை கொண்டு வரும் நோக்கில் வகையில் காப்பீட்டுச் சட்டம் 1938-ல் திருத்தம் செய்ய நான் முன்மொழிகிறேன் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 1 ம் தேதி தனது பட்ஜெட் உரையில் கூறியிருந்தார்.
புதிய உத்தேச வரையறையின் படி, நிறுவன வாரியத்தின் பெரும்பாலான இயக்குநர்கள் மற்றும் முக்கிய மேலாண்மை நிர்வாகிகள் இந்தியர்களாக இருப்பார்கள் என்றும், ஒரு குறிப்பிட்ட அளவிலான லாபம் பொது இருப்பாக வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Cabinet paves way for raising FDI limit in insurance sector to 74%
இந்த நடவடிக்கை காப்பீட்டுத்துறைக்கு பயனளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மலிவு விலையில் பரந்த அளவிலான திட்டங்களை கொண்ட சந்தையை வளர்க்க உதவும். காப்பீட்டு ஊடுருவல் தற்போது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 3.71 சதவீதமாக உள்ளது. அதிக அளவு முதலீடு செய்யப்படும் என்பதால் விளிம்புநிலை மக்களிடத்திலும் காப்பீட்டு ஊடுருவல் அதிகரிக்கும் சூழல் உருவாகும். பலத்த போட்டியின் காரணமாக கட்டண குறைப்பு ஏற்படுவதோடு, உலகளாவிய சிறந்த நடைமுறைகளையும் இது கொண்டு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.
நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், அரசு பொதுத் துறை நிறுவனங்களில் உத்தியுடன் கூடிய தனியார்மய கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார். முக்கியமற்ற பிரிவில் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும், அல்லது மூடப்படும் என்றும், முக்கிய பிரிவில் உள்ள குறைந்த அளவிலான பொதுத்துறை நிறுவனங்கள் மட்டும் இருக்கும் மற்றவை தனியார் மயமாக்கப்படும் அல்லது மற்ற பொதுத்துறை நிறுவனங்கள் இணைக்கப்படும் அல்லது மூடப்படும் என்றும் தெரிவித்தார்.
மத்திய அமைச்சரவையின் இந்த முடிவு, தனியார் மய கொள்கையை முன்னெடுப்பதற்கான அரசியல் சூழலை பிரதிபலிப்பதாக அமைகிறது. காப்பீட்டுத் துறையில் காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டு வரம்பை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்துவதற்கான மசோதா 2008 ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியால் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், இடது சாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பால் மசோதா நிறைவேற்றப்படவில்லை. 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக அரசு முதல் ஆண்டில் காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அமல்படுத்துவதற்கான அவசர சட்டத்தை கொண்டு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil