/tamil-ie/media/media_files/uploads/2022/02/money-salary-1-1.jpg)
Dearness Allowance (DA) hiked by 3% for central govt employees, pensioners: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (டிஏ) மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலை நிவாரணம் (டிஆர்) ஆகியவற்றை அடிப்படை ஊதியம்/ஓய்வூதியத்தில் தற்போதுள்ள 31 சதவீதத்திலிருந்து 3 சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
புதிய டிஏ மற்றும் டிஆர் விகிதங்கள் ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வரும் என்று அரசாங்கம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்: பிஎம் கிசான் நிதியுதவி திட்டம்; விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பு
"இந்த உயர்வு 7வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஃபார்முலாவின்படி உள்ளது" என்று அரசாங்கம் கூறியது.
DA மற்றும் DR ஆகிய இரண்டின் கணக்கின் மூலம் ஆண்டுக்கு ரூ.9,544.50 கோடி கூடுதலாக செலவாகும்.
இந்த நடவடிக்கையின் மூலம் சுமார் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.
இந்த உயர்வுக்கு முன், டிஏ மற்றும் டிஆர் கடந்த ஆண்டு அக்டோபரில் அமைச்சரவையால் 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 31 சதவீதம் ஆக வழங்கப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.