ஐஆர்சிடிசி வாடிக்கையாளர்கள், தற்போது ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகளை வரை முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபர், ஆதார் சரிபார்ப்பு செய்துகொண்டால் மட்டுமே இந்த வசதியைப் பெற முடியும். அத்துடன், பயணிகளில் குறைந்தது ஒருவராவது, ஆதார் சரிபார்ப்பு செய்திருக்க வேண்டும்.
முன்னதாக, ஒரு மாதத்தில் 6 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஆதார் சரிபார்ப்பு தேவையில்லை. எனவே பழைய முறைப்படி ஒரு மாதத்தில் 6 டிக்கெட்டுகளை ஆதார் இல்லாமல் முன்பதிவு செய்யும் வசதியும் தொடர்கிறது என ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.
ஒரே மாதத்தில் 12 டிக்கெட்களை முன்பதிவு செய்யும் முறை
- ஐஆர்சிடிசி பயனர், My profile இல் KYC optionஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.
- அடுத்ததாக, ஆதாருடன் பதிவுசெய்யப்பட்டுள்ள மொபைல் நம்பருக்கு ஓடிபி எண் வரும். அந்த எண்ணை பதிவிடுவதன் மூலம், ஆதார் எண் சரிபார்ப்பு நிறைவடைகிறது.
- 6 டிக்டெக் மேல் செல்கையில், நம்முடன் பயணிக்கும் நபர் ஒருவரும் ஆதார் எண்ணை சரிபார்த்திருக்க வேண்டும்.
- ஆதார் சரிபார்ப்பு செய்யப்பட்ட பயணியின் விவரத்தை, 12 டிக்கெட் புக் செய்கையில் சேர்க்க வேண்டும்.
ஆதார் மூலம் உங்கள் IRCTC பயனர் ஐடியை சரிபார்ப்பது எப்படி?
- முதலில் www.irctc.co.in என்ற இணையதள பக்கத்தில் உங்கள் உள்நுழைவு சான்றுகளை உள்ளிட்டு உள்நுழைய வேண்டும்.
- அடுத்ததாக MY accountஇல் Link your aadhar கிளிக் செய்ய வேண்டும்
- ஆதார் KYC பக்கம் திரையில் தோன்றும். அதில், ஆதார் கார்டில் உள்ளப்படியே விவரங்களை படிவிட்டு, Checkbox டிக் செய்து, Send OTP பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
- ஆதாருடன் பதிவு செய்ய மொபைலுக்கு வந்த ஓடிபி எண்ணை, சம்பந்தப்பட்ட இடத்தில் பதிவிட்டு, verify otp கிளிக் செய்ய வேண்டும்.
- ஆதார் விவரங்கள் சரிபார்க்கப்பட்டவுடன், இறுதியாக Update பட்டனை கிளிக்க செய்ய வேண்டும்.
- உறுதிப்படுத்தல் செய்தியுடன் பாப்-அப் விண்டோ தோன்றும். அதனை கிளோஸ் செய்துவிட்டு, மீண்டும் ஐஆர்சிடிசி லோகின் செய்ய வேண்டும்.
- அப்போது, மீண்டும் link your aadhar ஆப்ஷனுக்கு சென்று, உங்கள் ஆதார் சரிபார்ப்பு ஸ்டேட்ஸ் எந்த பிராசஸில் உள்ளது என்பதை பார்க்கமுடியும்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil