sukanya-samriddhi-yojana | செல்வ மகள் சேமிப்பு திட்டம் (சுகன்யா சம்ரித்தி யோஜனா-SSY) 14 வயதுக்கு உள்பட்ட பெண் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட திட்டம் ஆகும்.
இந்தத் திட்டம், பெண் குழந்தையின் கல்வி, திருமணத்திற்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில், 8.2 சதவீத வட்டி விகிததம் கிடைக்கிறது.
இத்திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.250 முதல் ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். திட்டத்தில் 15 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். 21 ஆண்டுகளுக்குப் பிறகு திட்டம் முதிர்ச்சியடையும்.
அஞ்சல், வங்கி
இந்தத் திட்டத்தை குறிப்பிட்ட வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களின் அனைத்து கிளைகளிலும் தொடங்கலாம். எனினும் ஆன்லைனில் தொடங்க அனுமதி இல்லை.
ஆனால் கணக்கை ஆஃப்லைனில் தொடங்கிவிட்டு, பின்னர் ஆன்லைனில் பணம் செலுத்தலாம்.
இருப்பு மற்றும் இருப்பு அறிக்கைகளை ஆன்லைனில் பெறலாம். மேலும் கணக்கை ஒரு கிளையில் இருந்து மற்றொரு கிளைக்கு மாற்றலாம்.
மேலும், ஆன்லைனில் SSY இருப்பைச் சரிபார்க்க, உங்கள் வங்கியின் நெட்பேங்கிங் வசதியைப் பயன்படுத்த வேண்டும். சுகன்யாவின் கணக்கு எண்ணைக் கிளிக் செய்தால், அவரது தற்போதைய இருப்புத் திரையில் தோன்றும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“