மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS), பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) கணக்குகளை தபால் அலுவலகத்திலிருந்து வங்கிக்கு அல்லது அதற்கு நேர்மாறாக மாற்றலாம்.
மற்ற அஞ்சல் அலுவலக சிறு சேமிப்பு திட்டங்களின் கணக்குகளை எந்த CBS தபால் நிலையத்திலிருந்தும் மற்றொரு CBS தபால் நிலையத்திற்கு மாற்றலாம்.
SCSS கணக்கை மாற்றுவது எப்படி?
SCSS கணக்கை மாற்றுவதற்கு, நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி/அஞ்சலகக் கிளைக்குச் சென்று, உங்கள் கணக்கை மாற்ற விரும்பும் அஞ்சல் அலுவலகம்/வங்கியின் முழு முகவரியுடன் பரிமாற்ற விண்ணப்பக் கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தியா போஸ்ட் இணையதளத்தில் உள்ள தகவலின்படி, SCSS கணக்கு வைத்திருப்பவர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பாஸ்புக் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்துடன் (Rs 100+GST) சம்பந்தப்பட்ட தபால் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
PPF கணக்கை மாற்றுவது எப்படி?
PPF கணக்கை மாற்றுவதற்கு, நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி/அஞ்சலகக் கிளைக்குச் சென்று, உங்கள் கணக்கை மாற்ற விரும்பும் அஞ்சல் அலுவலகம்/வங்கியின் முழு முகவரியுடன் பரிமாற்ற விண்ணப்பக் கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தியா போஸ்ட் இணையதளத்தில் உள்ள தகவலின்படி, PPF கணக்கு வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட விண்ணப்பப் படிவத்தை பாஸ்புக் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்துடன் (ரூ. 100+GST) சம்பந்தப்பட்ட தபால் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
SSY கணக்கிற்கும் மேலே குறிப்பிட்ட நடைமுறைகள் பொருந்தும். இதற்கு கட்டணமாக ரூ.100 மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/