கனடா கனவு கலைகிறது: கடும் விசா கட்டுப்பாடுகளால் இந்திய மாணவர்கள், ஊழியர்கள் வருகையில் பெரும் சரிவு

2024 உடன் ஒப்பிடு கையில், 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில், கனடாவுக்கு வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 70% சரிந்துள்ளது. அதே நேரத்தில், வெளிநாட்டு வேலை அனுமதி விசாக்களின் எண்ணிக்கையும் 50% குறைந்துள்ளது.

2024 உடன் ஒப்பிடு கையில், 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில், கனடாவுக்கு வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 70% சரிந்துள்ளது. அதே நேரத்தில், வெளிநாட்டு வேலை அனுமதி விசாக்களின் எண்ணிக்கையும் 50% குறைந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Canada student visa

Canada’s stricter visa rules behind steep drop in foreign students and workers

கனடா என்றாலே, வெளிநாட்டு மாணவர்களுக்கும், தற்காலிக ஊழியர்களுக்கும் திறந்திருக்கும் ஒரு தேசம் என்ற எண்ணம் நிலவி வந்தது. ஆனால், நிலைமை மாறிக்கொண்டிருக்கிறது. கனடா அரசு வெளிப்படையாகவே, நாட்டில் தற்காலிகமாக வசிக்கும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதில் உறுதியாக உள்ளது. 2025-2027 வரையிலான கனடாவின் புதிய குடியேற்றக் கொள்கை, இந்த மாற்றத்தை திட்டவட்டமாக அறிவிக்கிறது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 5 சதவீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும் என்பதே கனடாவின் இலக்கு.
 
2024 உடன் ஒப்பிடு கையில், 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில், கனடாவுக்கு வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 70% சரிந்துள்ளது. அதே நேரத்தில், வெளிநாட்டு வேலை அனுமதி விசாக்களின் எண்ணிக்கையும் 50% குறைந்துள்ளது. இது வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல, கனடாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கனவுகள் உடைந்து போனதைக் காட்டுகிறது. குறிப்பாக, இந்திய மாணவர்கள் இந்த மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். 2025 இல் இந்திய மாணவர்களின் படிப்பு அனுமதி நிராகரிப்பு விகிதம் 80% ஆக உயர்ந்து, மிக அதிகமாக பாதிப்படைந்த சமூகமாக இந்தியர்கள் மாறியுள்ளனர்.

Advertisment

இந்த மாற்றங்களுக்கான காரணங்கள் என்ன?

கனடாவின் இந்தக் கடுமையான முடிவுகளுக்குப் பின்னால் பல முக்கிய காரணங்கள் உள்ளன:

மாணவர் அனுமதிக்கு உச்சவரம்பு: 2024 ஆம் ஆண்டில் சர்வதேச மாணவர்களின் படிப்பு அனுமதிக்கு ஒரு குறிப்பிட்ட உச்சவரம்பு (cap) நிர்ணயிக்கப்பட்டது. 2025 ஆம் ஆண்டில் இது மேலும் 10% குறைக்கப்பட்டுள்ளது. இதனால், 2025 ஆம் ஆண்டில் மொத்தம் 4,37,000 படிப்பு அனுமதிகளை மட்டுமே வழங்க கனடா அரசு திட்டமிட்டுள்ளது.

நிதி ஆதாரத்திற்கான கூடுதல் தேவை: வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் கல்வி மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்கு போதுமான நிதி ஆதாரங்களைக் காட்ட வேண்டும். 2024 இல் ஒரு மாணவர் $20,635 சேமிப்பு வைத்திருப்பதை நிரூபிக்க வேண்டியிருந்தது. ஆனால், செப்டம்பர் 1, 2025 முதல், இந்தத் தொகை $22,895 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

மோசடிகளைத் தடுக்க புதிய விதிமுறைகள்: போலியான அனுமதி கடிதங்கள் (Letter of Acceptance) மூலம் மாணவர்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்க, கனடா அரசு புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம், விண்ணப்பதாரரின் அனுமதி கடிதம் நேரடியாக கல்லூரிகளால் IRCC-க்கு (Immigration, Refugees and Citizenship Canada) சரிபார்ப்புக்கு அனுப்பப்படும்.

வேலை அனுமதி விசாக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: வெளிநாட்டு ஊழியர்களின் வருகையைக் கட்டுப்படுத்த, கனடா அரசு குறைந்த ஊதிய வேலைகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வேலையின்மை 6% அல்லது அதற்கு அதிகமாக உள்ள நகரங்களில், வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்துவதற்கு புதிய கொள்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. நிறுவனங்கள் முதலில் கனேடியர்களுக்கு வேலை கொடுக்க முயற்சிப்பதை நிரூபிக்க வேண்டியது அவசியம்.

PGWP-யில் மாற்றங்கள்: பட்டப்படிப்புக்குப் பிந்தைய பணி அனுமதி (PGWP) திட்டத்தின் தகுதிக்கான விதிகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதன் நோக்கம், வேலை சந்தையின் தேவைக்கேற்ப வெளிநாட்டு ஊழியர்களை இணைப்பதுதான்.

கனடாவின் இந்த முடிவுகள், பொருளாதார வளர்ச்சி, வீட்டுவசதி நெருக்கடி மற்றும் பொதுச் சேவைகள் மீதான அழுத்தத்தைக் குறைப்பது போன்ற உள்நாட்டுச் சவால்களைச் சமாளிப்பதற்கான ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் கனடாவுக்குச் செல்லத் திட்டமிடும் இந்திய மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஒரு புதிய சவாலாக அமைந்துள்ளது. 

இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

Canada

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: