canara bank atm canara atm canarabank : கனரா வங்கி வாடிக்கையாளர்களே இந்த தகவல் உங்களுக்கு தான். இனிமே நீங்கள் கனரா ஏடிஎம் சென்றால் கட்டாயம் மொபைலை எடுத்து செல்லுங்கள்.இனிமே மொபைல் இல்லாமல் பணம் எடுக்க முடியாது.
நீங்கள் ஏடிஎம்மில் 10 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான ரொக்கத்தை எடுக்க விரும்பினால், நீங்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அதை பதிவு செய்தால் தான் ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியும். ஏ.டி.எம். இயந்திரத்தில் பதிவு செய்த பின்னர் பணத்தை பெற்றுக்கொள்ளலாம். ஓ.டி.பி எண்ணை பதிவு செய்யாவிட்டால் பணம் கிடைக்காது.
இது, கனரா வங்கி ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்கும் கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரத்துக்கு குறைவாக பணம் எடுப்பவர்கள் பழைய முறையிலேயே பணம் பெற்றுக்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கும் வசதியை அளிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் கனரா வங்கி நிர்வாகம் இதுப் போன்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த தகவல் முன்பே பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. அதே சமயம் பலருக்கும் தெரியாத போது அனைவருக்கும் பகிருங்கள். முடிந்த வரை அனைவரும் தெரிந்துக் கொள்வது பயன் அளிக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil