கனரா வங்கியில் பிக்சட் டெபாசிட் தொடர்கிறீர்களா? அப்ப அதிர்ஷ்டசாலி நீங்க தான்!

பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது.

பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
canara bank netbanking

canara bank netbanking

canara bank fd rates : பங்குச்சந்தை, மியுச்சுவல் பண்ட்ஸ், தங்கம், நிலம் போன்றவற்றில் முதலீடு செய்யும் போக்கு இந்திய மக்களிடம் அதிகரித்து வந்தாலும், வைப்பு நிதி என்று சொல்லப்படுகிற பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்பவர்களே இந்தியாவில் அதிகம்.

Advertisment

ஏனெனில் இது ஒரு பாதுகாப்பான முதலீடாகும். பாதுகாப்பும், உறுதியாக கிடைக்கும் வட்டி வருவாயும் இதனை நோக்கி மக்களை ஈர்க்கிறது. பங்குச்சந்தையில் ரிஸ்க் எடுக்க தயங்குபவர்களுக்கு பிக்சட் டெபாசிட் திட்டம் சிறந்தது. வங்கி பிக்சட் டெபாசிட்களின் வட்டி விகிதம், காலாண்டுக்கு ஒரு முறை கூட்டு வட்டியாக கணக்கிடப்படுகிறது. ஆன்லைன் மூலம் கணக்கைத் தொடங்கி நிலையான வைப்புத்தொகையைச் செலுத்துவதன் மூலம், வட்டி விகிதம் கொஞ்சம் அதிகமாகக் கிடைக்கும்.

இப்படி மாறி மாறி பிக்சட் டெபாசிட் பற்றி தெரிந்துக் கொண்டது எல்லாம் போது. அதிக வட்டியே சிறந்த லாபம். நீங்கள் லாபத்தை நினைத்து முதலீடு செய்வது தான் எப்போதுமே நல்லது. சரி பிக்சட் டெபாசிட் திட்டத்தில் அதிகம் லாபம் தரும் வங்கி எதுன்னு பார்ப்போமா?

read more... இந்தியன் வங்கியில் கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தவில்லையா? பயம் வேண்டாம் வங்கி தரும் பொன்னான வாய்ப்பு இது!

Advertisment
Advertisements

பொதுத் துறை வங்கி நிறுவனமான கனரா வங்கியில் அண்மையில் பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது. ஒரு கோடி ரூபாய் வரையில் 1 வருடத்திற்கு முதலீடு செய்யும் போது புதிய வட்டி உயர்வின் படி பொதுப் பிக்சட் டெபாசிட் கணக்குகளுக்கு 7 சதவீத வட்டி விகிதமும், மூத்த குடிமக்களுக்கான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 7.50 சதவீத வட்டி விகித லாபத்தினையும் கனரா வங்கி அளிக்கிறது. அப்ப உங்கள் பிக்சட் டெபாசிட் கணக்கு எங்கு தொடங்கலாம் யோசியுங்கள்.

1 கோடிக்கும் கீழ் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு கிடைக்கும் வட்டிவிகிதம்.

> 1 -2 வருட திட்டம்- 7 சதவீதம் வட்டி – 7.5 சதவீதம் வட்டி (மூத்த குடிமக்கள்)

> 2 -3 வருட திட்டம்- 6.7 சதவீதம் வட்டி – 7.2 சதவீதம் வட்டி (மூத்த குடிமக்கள்)

> 3 -5 வருட திட்டம்- 6.2 சதவீதம் வட்டி – 6.7 சதவீதம் வட்டி (மூத்த குடிமக்கள்)

> 5 -8 வருட திட்டம்- 6.2 சதவீதம் வட்டி – 6.7 சதவீதம் வட்டி (மூத்த குடிமக்கள்)

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: