Advertisment

பிக்சட் டெபாசிட் திட்டத்தில் பட்டையை கிளப்பும் கனரா வங்கி.. வட்டி மட்டுமே இவ்வளவு!

முதலீடு செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
state bank

state bank

canara bank : பொதுத் துறை வங்கி நிறுவனமான கனரா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் அளிக்கும் வட்டி விகிதம் 7 சதவீதம் ஆகும்.

Advertisment

இதன்படி, ஒரு கோடி ரூபாய் வரையில் 1 வருடத்திற்கு முதலீடு செய்யும் போது புதிய வட்டி உயர்வின் படி பொதுப் பிக்சட் டெபாசிட் கணக்குகளுக்கு 7 சதவீத வட்டி விகிதமும், மூத்த குடிமக்களுக்கான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 7.50 சதவீத வட்டி விகித லாபத்தினையும் கனரா வங்கி அளிக்கிறது.

கனரா வங்கியின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரம் கனரா வங்கியின் பிகசட் டெபாசிட் திட்டத்தில் 1 கோடி ரூபாய்க்கும் குறைவாக முதலீடு செய்யும் போது எந்த அடிப்படையில் முதலீடு செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும் என்ற சந்தேகம் உங்களுக்கு எழு வாய்ப்புகள் அதிகம் .

கனவிலும் நீங்கள் நினைத்து பார்க்காத ஒன்று.. எஸ்பிஐ-யில் மினிமம் பேலன்ஸ் பிரச்சனை இனி இல்லை!

அந்த கேள்விக்கு பதில் இதோ.. கனரா வங்கியில் 1 கோடிக்கும் கீழ் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு கிடைக்கும் வட்டிவிகிதம்.

> 1 -2 வருட திட்டம்- 7 சதவீதம் வட்டி – 7.5 சதவீதம் வட்டி (மூத்த குடிமக்கள்)

> 2 -3 வருட திட்டம்- 6.7 சதவீதம் வட்டி – 7.2 சதவீதம் வட்டி (மூத்த குடிமக்கள்)

> 3 -5 வருட திட்டம்- 6.2 சதவீதம் வட்டி – 6.7 சதவீதம் வட்டி (மூத்த குடிமக்கள்)

> 5 -8 வருட திட்டம்- 6.2 சதவீதம் வட்டி – 6.7 சதவீதம் வட்டி (மூத்த குடிமக்கள்)

> 8 -10 வருட திட்டம்- 6.2 சதவீதம் வட்டி – 6.7 சதவீதம் வட்டி (மூத்த குடிமக்கள்)

> 444 நாட்கள் திட்டம் 7.05 சதவீதம் வட்டி – 7.55 சதவீதம் வட்டி (மூத்த குடிமக்கள்)

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment