canara bank fixed deposit interest : பொதுவாக அடித்தளத்தில் இருக்கும் மக்கள் முதல் கோடிக்கணக்கில் பணம் பார்க்கும் தொழிலதிபவர்கள் வரை பலரும் தங்களது பணத்தை வருங்காலத்திற்காக சேர்ப்பது வங்கியில் தான்.
கனரா வங்கி பிக்சட் டெபாசிட்:
ஆனால் தேவை மற்றும் வசதிக்கேற்ப வங்கிகள் மாறுபடலாம். அதே போல் வங்கிகளில் அக்கவுண்ட் தொடரும் பலரும் நீங்கள் தொடர இருக்கும் சேமிப்பு கணக்குகள், பிக்சட் டெபாசிபட், வீட்டுக்கடன் போன்றவற்றிற்கு எவ்வளவு சலுகைகள் தருகின்றன, எந்த மாதிரியான வசதிகளை ஏற்படுத்தி தருகின்றன போன்றவற்றை விரிவாக தெரிந்துக் கொள்வதில்லை.
இதுப்போன்ற குழப்பத்தில் இருந்து மக்களுக்கு உதவும் வகையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் செய்தித்தளத்தில் நாள்தோறும் வங்கி சேவைகள் மட்டும் திட்டங்கள் குறித்து பல செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன.
5 நிமிடத்தில் 5 விதமான கடன்களை எஸ்பிஐ உங்களுக்கு வழங்குகிறது.
அந்த வகையில் இன்று கனரா வங்கி பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் வட்டிவிகிதம் குறித்த தகவல்கள் பகிரப்பட்டுள்ளன.
பொதுத் துறை வங்கி நிறுவனமான கனரா வங்கி 2018 நவம்பர் 1 முதல் தங்களது பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை உயர்த்தியுள்ளது. ஒரு கோடி ரூபாய் வரையில் 1 வருடத்திற்கு முதலீடு செய்யும் போது புதிய வட்டி உயர்வின் படி பொதுப் பிக்சட் டெபாசிட் கணக்குகளுக்கு 7 சதவீத வட்டி விகிதமும், மூத்த குடிமக்களுக்கான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 7.50 சதவீத வட்டி விகித லாபத்தினையும் கனரா வங்கி அளிக்கிறது.
1 கோடிக்கும் கீழ் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு கிடைக்கும் வட்டிவிகிதம்.
> 1 -2 வருட திட்டம்- 7 சதவீதம் வட்டி – 7.5 சதவீதம் வட்டி (மூத்த குடிமக்கள்)
> 2 -3 வருட திட்டம்- 6.7 சதவீதம் வட்டி – 7.2 சதவீதம் வட்டி (மூத்த குடிமக்கள்)
> 3 -5 வருட திட்டம்- 6.2 சதவீதம் வட்டி – 6.7 சதவீதம் வட்டி (மூத்த குடிமக்கள்)
> 5 -8 வருட திட்டம்- 6.2 சதவீதம் வட்டி – 6.7 சதவீதம் வட்டி (மூத்த குடிமக்கள்)