canara bank fixed deposit rates : ஒரு மாதத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்தால் சேவை கட்டணம் ரூ.50 முதல் ரூ.5 ஆயிரம் வரை வசூலிக்கப்படும் என்று கனரா வங்கி அறிவித்துள்ளது.
ஒரு மாதத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்தால், சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்று வாடிக்கையாளர்களுக்கு கனரா வங்கி அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இது குறித்து கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஒரு மாதத்தில் முதல் மூன்று முறை மட்டுமே ரூ.50 ஆயிரத்துக்குள் டெபாசிட் இலவசம். 3 முறைக்கு மேல் செலுத்தும் ஒவ்வொரு தொகைக்கும் ரூ.50ம், மற்றும் ஜிஎஸ்டி, அதிகப்பட்சமாக ரூ.5 ஆயிரம் மற்றும் ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்படும்.
ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் செலுத்தும் ஒவ்வொரு முறையும் ரூ.50ம், அதிக பட்சம் ரூ.5 ஆயிரம் மற்றும் ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்படும். நமது வங்கிக் கணக்கில் சேமிப்பு கணக்கில் முதல் 5 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும். 5 முறைக்கு மேல் எடுக்கும் ஒவ்வொரு தொகைக்கும் ரூ.100ம் மற்றும் ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்படும்.
எஸ்பிஐ சேவிங்ஸ் அக்கவுண்டுக்கு இவ்வளவு வட்டி தரும்போது வேற எங்க போறீங்க!
நமது வங்கிக் கிளையில் நடப்பு கணக்கில், மாதத்திற்கு ரூ.5 லட்சம் வரை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும். ரூ.5 லட்சத்துக்கு மேல் குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய், அதிக பட்சம் ரூ.10 ஆயிரம் மற்றும் ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்படும். இவ்வாறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. தற்போது கனரா வங்கி மட்டும் இந்த அறிவிப்புகளை செய்துள்ளது.